காட்டு ராஜாவை பதம் பார்த்த தம்மாதுண்டு பாம்பு..பதற வைக்கும் வைரல் வீடியோ

Snake Vs Lion Fight Video: பாம்பை வம்புக்கு இழுத்த சிங்கத்தின் நிலையை நீங்கள் இந்த வீடியோவில் காணலாம். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 2, 2023, 03:26 PM IST
  • பாம்பின் வாலை இழுத்து சண்டை இடும் சிங்கம்.
  • கடுப்பான இரண்டு தலை பாம்பு.
  • முரட்டு பாம்பின் வைரல் வீடியோ.
காட்டு ராஜாவை பதம் பார்த்த தம்மாதுண்டு பாம்பு..பதற வைக்கும் வைரல் வீடியோ title=

சிங்கம் மற்றும் பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஒரு ஆச்சரியமான உலகமாகும். இங்கே நாம் கற்பனை கூட செய்ய முடியாத பல விஷயங்களை காண்கிறோம். அதன்படி பொதுவாக நாம் இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அதிலும் விலங்குகளின் குறிப்பாக "பாம்பு, சிங்கம், குரங்கு, யானை" வீடியோகளுக்கென தனி மவுசு இருக்கிறது.

இந்த நிலையில் சுவாரஸ்யமான இணைய உலகமான சமூக ஊடகங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அதிலும் பாம்பு வீடியோக்கள் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு வருகின்றது. அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டது. மேலும் இந்த சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ நிச்சயம் உங்களை சிரிக்க வைக்கும்.

மேலும் படிக்க | அட கடவுளே..பள்ளி படிக்கும் மாணவர்கள் இப்படியா செய்றது..வீடியோ வைரல்

சிங்கத்தை தாக்கிய பாம்பு
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், சிங்கம் காட்டில் வேட்டையாட அலைவதைப் காணலாம். அப்போது அந்த சிங்கத்தின் பார்வையில் இரு தலை கொண்ட பாம்பு ஒன்று தென்படுகிறது. பின்னர் அந்த பாம்பை வம்பிழுக்க முயற்சிக்கிறது. சிங்கத்தின் செயலால் கோபமடைந்து அந்த பாம்பை அதன் வாயைப் பிடிக்க முன்னோக்கி பாய்கிறது. இறுதியில் அந்த சிங்கம் பாம்பிடம் கடி வாங்குகிறது.

சிங்கம் மற்றும் பாம்பு சண்டையின் வீடியோவை இங்கே காணுங்கள்\

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Wildma (@wildmaofficial)

இந்த வீடியோ wildmaofficial என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | குஷி பட ஜோதிகா போல் குளித்து கும்மாளம் போடும் நாய்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News