'அட கெரகமே!!’: பெண்ணிடம் பல்பு வாங்கிய முதலை, கலாய்க்கும் இணையவாசிகள், வைரல் வீடியோ

Funny Viral Video: ‘அய்யோ பாவம் முதலை’ என ஒரு முதலை இணையவாசிகளை பாவப்பட வைத்துள்ளது. இந்த வீடியோவை பார்த்து மக்களால் சிரிப்பை நிறுத்தமுடியவில்லை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 24, 2022, 12:53 PM IST
  • பெண்ணை தாக்க தயாரான முதலை.
  • குளத்தை விட்டு பெண்ணிடம் சென்ற முதலைக்கு காத்திருந்த ஷாக்.
  • வைரலாகும் வேடிக்கை வீடியோ.
'அட கெரகமே!!’: பெண்ணிடம் பல்பு வாங்கிய முதலை, கலாய்க்கும் இணையவாசிகள், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் அதிகம் வெளியிடப்படுகின்றன. அருகில் சென்று பார்க்க முடியாத இந்த விலங்குகளை வீடியோக்கள் மூலமாக காண மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். சிங்கம், யானை, முதலை என பல வித விலங்குகளின் வீடியோக்கள் வெளியாகின்றன. 

தற்போது மீண்டும் முதலை தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதில் ஒரு குளத்தின் அருகில் பெண் ஒருவர் நிற்பது போன்ற கட்அவுட் இருக்கிறது. குளத்தில் உள்ள முதலை ஒன்று அந்த கட்அவுட்டை நிஜமான பெண் என்று நினைத்துக்கொள்கிறது. அது பெண்ணை பிடிக்கும் எண்ணத்தில் சத்தம் எழுப்பாமல் மெதுவாக குளத்தை விட்டு வெளியே வருகிறது. முதலை மெதுவாக செல்வதை வீடியோவில் நன்றாக காண முடிகின்றது. பெண்ணின் கட்அவுட்டுக்கு அருகில் சென்ற உடனேயே முதலை உடனடியாக அதை தாக்கத் தொடங்குகிறது. 

மேலும் படிக்க | முதலைகளுக்கு இடையில் மாஸ் காட்டும் பெண்: வாய் பிளக்கும் நெட்டிசன்கள் 

தாக்கிய முதலை 

காட்டு விலங்குகள் தொடர்பான இந்த வீடியோவில், முதலை தனது இரையை தொலைவில் இருந்து குறிவைப்பதை காண்கிறோம். அது தண்ணீரில் இருந்து வெளியே வந்து, மெதுவாக, பெண்ணின் கட்-அவுட் அருகே செல்கிறது. ஒரே பிடியில் முதலை பாய்ந்து கட்-அவுட்டை பிடிக்கிறது. ஆனால், அதற்கு பிறகுதான் தான் ஏமாந்துவிட்டோம் என்பது முதலைக்கு புரிகிறது. 

முதலை ஏமாந்து பல்பு வாங்கிய வீடியோவை இங்கே காணலாம்:

சிரிப்பை அடக்க முடியாது 

இந்த வீடியோவில் முதலை செய்யும் செயல்களை பார்த்தால் நம்மால் சிரிப்பை அடக்க முடியாது. இந்த வீடியோ 247wildlifeandfricanwildlife1 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலத்த விமர்சனங்களை பகிர்ந்து வருகிறார்கள். 

இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். ‘முதலை ஏமாந்த விதத்தை பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர், ‘அய்யோ பாவம்..முதலை’ என எழுதியுள்ளார்.

மேலும் படிக்க | வடிவேலு போல குப்பைத்தொட்டிக்குள் மாட்டிக்கொண்ட பூனை! வைரல் வீடியோ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News