கூலிங் கிளாஸ் போட்டு மாஸ் காட்டும் கூல் சிம்பன்சி: பொறாமையில் நெட்டிசன்கள்

Funny Video: ஒரு கில்லாடி சிம்பன்சி இணையத்தை கலக்கி வருகிறது. விடுமுறைக்காகவும், மாறுதலுக்காக எங்காவது சுற்றுலா செல்லவும் காத்திருப்பவர்களுக்கு இந்த சிம்பன்சியை பார்த்தால் சிறு பொறாமையே வரும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 5, 2022, 07:57 PM IST
  • கூலாக இளநீர் குடிக்கும் சிம்பன்சி.
  • கூலிங் கிளாசை கழற்றி செம மாஸ்.
  • வைரலாகும் வீடியோ.
கூலிங் கிளாஸ் போட்டு மாஸ் காட்டும் கூல் சிம்பன்சி: பொறாமையில் நெட்டிசன்கள் title=

வைரல் வீடியோ: இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. பல வகையான வீடியோக்கள் சமூக வாலைதளத்தில் பகிரப்பட்டாலும், விலங்குகள் தொடர்பான வேடிக்கை வீடியோக்கள் என்றுமே எளிதில் வைரலாகி விடும். 

சமீபத்தில் ஒரு வித்தியாசமான சிம்பன்சியின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. நாம் அனைவரும் நமது அன்றாட வேலைகளால் அதிக மன அழுத்தத்துக்கும் உடல் சோர்வுக்கும் ஆளாகிறோம். வார இறுதி நாட்களுக்காக காத்திருக்கிறோம். அப்படி விடுமுறைக்காகவும், மாறுதலுக்காக எங்காவது சுற்றுலா செல்லவும் காத்திருப்பவர்களுக்கு இந்த சிம்பன்சியை பார்த்தால் சிறு பொறாமையே வரும். 

சிறைபிடிக்கப்பட்டு மிருக காட்சி சாலைகளில் இருக்கும் விலங்குகளை பற்றி நினைத்தால் நம்மில் பலருக்கு பாவமாக இருக்கும். ஆனால், அப்படி ஒரு மிருகக்காட்சி சாலையில் படு கூலாக தனது வாழ்கையை கழித்துக்கொண்டிருக்கும் ஒரு சிம்பன்சியின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது. 

மேலும் படிக்க  போனுக்கு செம சண்டை போடும் குழந்தையும் குரங்கும்: நெட்டிசன்களை சிரிக்க வைத்த வைரல் வீடியோ 

லிம்பானி என்று பெயரிடப்பட்ட இந்த குரங்கு இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான ஒரு குரங்காகும். இந்த குரங்குக்கு 700k இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ் உள்ளனர். அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள மியாமியில் உள்ள விலங்கியல் வனவிலங்கு அறக்கட்டளையில் (ZWF) இந்த கியூட்டான சிம்பன்சி வாழ்கிறது. இந்த சிம்பன்சி உலகம் முழுவதும் உள்ள விலங்கு பிரியர்களின் இதயங்களை வென்றுள்ளது. 

இந்த வீடியோ அந்த சிம்பன்சியின் இன்ஸ்டாக்ராம் பேஜான 'limbanizwf'-இல் பகிரப்பட்டுள்ளது. இதில், 'இளநீர் போல கூலாக இருக்கணும்' என எழுதப்பட்டுள்ளது.  மிக கூலாக காட்சியளிக்கும் இந்த சிம்பன்சி மஞ்சள் நிற சன் கிளாசஸ் அணிந்து, ஒரு ஸ்ட்ரா கொண்டு இளநீர் குடித்துக்கொண்டிருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. இந்த வீடியோவுக்கு 807k வியூஸ்களையும் 25k லைக்குகளையும் பெற்றுள்ளது. 

கூல் சிம்பன்சியின் கிளாஸ் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Limbani (@limbanizwf)

நெட்டிசன்களுக்கு இந்த வீடியோ மிகவும் பிடித்துப்போனது. இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகின்றனர். "எனக்கும் இந்த குரங்கைப் போல கவலையில்லாமல் இருக்க வேண்டும்" என ஒரு பயனர் தனது ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். "இந்த சிம்பன்சி செம கூலாக இருக்கிறது" என கமெண்ட் செய்துள்ளார். சிமப்ன்சியின் ஆட்டிட்யூட் அனைவரையும் கவர்ந்துள்ளது.

மேலும் படிக்க | சாகசம் செய்த இளைஞர்களை கீழே தள்ளிவிட்ட நபர்; பகீர் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News