மனிதர்களில் சிலர் சூழ்நிலைக்கு தகுந்தவாறு தங்களை மாற்றிக்கொள்வர். அப்படி மாற்றிக்கொள்பவர்களை பச்சோந்தி என்று பலரால் அழைக்கப்படுவார்கள். தாம் இருக்கும் இடத்துக்கேற்ப நிறத்தை மாற்றிக்கொள்ளும் பச்சோந்திகள் அடிப்படையில் மிகுந்த அச்ச சுபாவத்தை கொண்டிருப்பவை.
பச்சோந்திகள் நிறத்தை மாற்றிக்கொள்வதற்கு முக்கிய காரணம் ஏதேனும் ஒரு உயிரால் தனக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்பதுதான். அதனால்தான் அவை ஒரு நிமிடத்துக்குமேல் ஒரே நிறத்தில் பெரும்பாலும் இருக்காது. அதேசமயம், இரையை வேட்டையாடவும் பச்சோந்திகள் நிறத்தை மாற்றிக்கொள்ளும் வழக்கம் உடையவை.
பச்சோந்திகளின் தோலில் இரட்டை அடுக்கு கொண்ட போட்டோனிக் கிரிஸ்டல்கள் (ஒளிரும் படிகங்கள்) இருக்கின்றன. அவைதான் பச்சோந்திகள் அடிக்கடி நிறம் மாற உதவுகின்றன என சமீபத்திய் ஆய்வு ஒன்றில் தெரியவந்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | பெண்ணை தாக்கியவனை விரட்டியடிக்கும் நாய்க்குட்டியின் வைரல் வீடியோ
அதுமட்டுமின்றி, தன் உருவத்தை பெரிதாகவோ, சிறிதாகவோ அவைகளால் மாற்றிக்கொள்ள முடியும். மேலும் ஒரு கண்ணால் ஒரு இடத்தையும், மற்றொரு கண்ணால் வேறு ஒரு இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியும்.
இப்படி பச்சோந்திகள் குறித்து பல விஷயங்கள் இருந்தாலும் மனிதர்களைப் பொறுத்தவரை பச்சோந்திகள் என்றால் நிறம் மாறுபவை என்ற பொதுவான கருத்து இருக்கிறது. மேலும், பச்சோந்தி எப்படி நிறம் மாறும் என்று காண்பதற்கு ஆவலோடும் இருப்பார்கள்.
Chameleon changing its color in no time pic.twitter.com/hL2NJp9BMJ
— o̴g̴ (@Yoda4ever) June 7, 2022
இந்நிலையில், பச்சோந்தி நிறம் மாறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பலரையும் கவர்ந்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு டேபிளில் வாழைப்பழம், செர்ரி ஆகிய பழங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த டேபிளில் விடப்படும் பச்சோந்தி மெதுவாக நடந்து செல்ல ஆரம்பிக்கிறது.
மேலும் படிக்க | பதட்டத்தின் உச்சக்கட்டம்; கிங் கோப்ரா, நாகப்பாம்பு இடையே தாறுமாறு தகராறு
அப்போது வாழைப்பழத்தின் மேல் ஏறும் பச்சோந்தியின் உடல் உடனே மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது. அதனையடுத்து செர்ரி பழத்தில் ஏறும்போது அதன் உடல் சிகப்பு நிறத்தில் மாறுகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR