இந்த பரந்த உலகத்தில் வேடிக்கையான பல விஷயங்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அவை அனைத்தும் அனைவருக்கும் தெரிவதில்லை. சில நிகழ்வுகள் மட்டும் எப்படியாவது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி அனைவரிடமும் சென்றடைகிறது.
தற்போதைய காலகட்டத்தில் சிசிடிவி கேமிராவில் மூலம் தான் பல கொள்ளையர்களை காவல் துறையினர் பிடிக்கின்றனர். இது போன்ற ஒரு திருடனின் 20 வினாடிகள் கொண்டவீடியோவை மும்பை காவல்துறையினர் தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த வீடியோவில், கூடநேரிசலான ஒரு கடையில் மக்கள் பொருட்களை வாங்குவதற்காக வரிசையில் நிற்கின்றனர். அப்போது பின்னல் இளைஞன் வந்து நிற்கிறார். அந்த இளைஞன் தனக்கு முன்னாள் உள்ள ஒருவரின் பாக்கெட்டில் உள்ள பர்சை எடுக்கிறார். எடுத்த பின்னர் சுற்றி பார்க்கையில், ஒருவர் இதை வீடியோ எடுப்பதை கண்டு கேமராவை பார்த்து மன்னிப்பு கேட்ட பின்னர் அந்த பர்ஸ் உரிமையாளரிடம் அதை கொடுக்கிறார்.
இந்த வீடியோ பார்பதற்கு நகைச்சுவையாக இருப்பதால் இந்த மும்பை காவதுறையினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில், இந்த வீடியோ நகைச்சுவையானது. ஆனால், உண்மையில் இதன் விளைவுகள் மிகவும் தீவிரமானது என குறிப்பிட்டு இந்த வீடியோவை பதிவுட்டுள்ளது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதோ, அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது...!
The video is funny, but the consequences in reality will be quite serious! #EyeOpenersForYou pic.twitter.com/rcQqypvsqF
— Mumbai Police (@MumbaiPolice) August 20, 2018