வீடியோ கால் பேசவிடாமல் தொந்தரவு செய்யும் பாய் பெஸ்டி பூனை! வைரல் வீடியோ!

பூனை ஒன்று ஒரு பெண்ணை வீடியோ கால் பேச விடாமல் தொந்தரவு செய்யும் காட்சி இணையத்தில் கவன ஈர்ப்பை பெற்றுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Nov 13, 2022, 04:11 PM IST
  • பெண்ணிடம் கொஞ்சி விளையாடும் குட்டி பூனை.
  • முத்த மழை பொழிந்து பாசத்தை வெளிப்படுத்துகிறது.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
வீடியோ கால் பேசவிடாமல் தொந்தரவு செய்யும் பாய் பெஸ்டி பூனை! வைரல் வீடியோ! title=

இன்றைய காலகட்டத்திலுள்ள காதலர்கள் பலரும் வெறுக்கும் வார்த்தை 'பெஸ்டி', பாய் பெஸ்டி, கேர்ள் பெஸ்டி எந்த பெஸ்டியாக இருந்தாலும் தொந்தரவு தான்.  அதிலும் இந்த வளர்ப்பு பிராணிகளை பாசமாக வைத்திருப்பவர்களை காதலர்களாக வைத்திருப்பது அதைவிட பெரும் கொடுமை, தங்களுடைய செல்லப்பிராணிகளை கொஞ்சுவதற்கே அவர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள்.  இப்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஒரு பெண் வளர்க்கும் பூனை அவளை அவரது காதலனுடன் பேசவிடாமல் கொஞ்சி கொண்டு இருக்கிறது, இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து வைரலாகியுள்ளது.  இப்போதெல்லாம் நாய்களை போல பூனைகளை அதிகமாக செல்லப்பிராணிகளாக பலரது வீடுகளிலும் வளர்க்க தொடங்கிவிட்டனர்.

மேலும் படிக்க | அணகோண்டா பாம்பிடம் சரமாரியாக கடிவாங்கிய நபர்; வைரல் வீடியோ 

குட்டியாக, க்யூட்டாக இருக்கும் பூனைக்குட்டிகள் இப்போது பலரின் செல்ல பிராணிகளாக இருக்கிறது.  பலரும் கண்டு ரசித்த அந்த வைரல் வீடியோவானது டிவிட்டரில் Animalesybichos என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் ஒரு பெண் மெத்தையின் மீது படுத்துக்கொண்டு இருக்கிறார், அவர் மீது வெள்ளை மற்றும் செம்பழுப்பு நிறம் கலந்த பூனைக்குட்டி ஒன்று படுத்துக்கொண்டு அந்த பெண்ணுக்கு முத்த மழை பொழிந்து கொஞ்சிக்கொண்டு இருக்கின்றது.  அந்த பெண் அவரது காதலருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டு இருக்கின்றார், ஆனால் அந்த பூனை அந்த பெண்ணை பேசவிடாமல் கொஞ்சிக்கொண்டே இருக்கின்றது, அந்த பெண்ணும் சிணுங்கிக்கொண்டே பூனையையும் சமாளித்து கொண்டு தனது காதலருடன் பேச முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

 

இந்த வீடியோ பார்ப்பதற்கு நமக்கு அழகாக தெரிந்தாலும் அந்த பெண்ணின் காதலருக்கு கொஞ்சம் எரிச்சலாக தான் இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது.  இந்த வீடியோ பல இணையாவசிகளின் கவனத்தை ஈர்த்ததோடு அதிக லைக்குகளையும், கமெண்டுகளையும் குவித்துள்ளது.

மேலும் படிக்க | சாமி சாமி பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட சிறுமி: ஷேர் செய்த மந்தனா, வைரலான வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News