Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் (Wedding Video) இணையத்தை கலக்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு மணமகளின் வீடியோ அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருகிறது.
திருமணத்தை விட கல்விக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்த மணப்பெண்ணின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோ குஜராத்தில் எடுக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 21 நாட்கள் தீபாவளி விடுமுறை முடிந்துவிட்டது. இதில் ராஜ்கோட்டும் அடங்கும். அங்கு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இரண்டாவது கல்வி அமர்வு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
ALSO READ: Viral Video: திருமண மேடையில் 'Out of Control' ஆன மணமகன், மேடையிலேயே செய்த காரியம்!!
தீபாவளி விடுமுறைக்குப் பிறகு, சவுராஷ்டிரா பல்கலைக்கழகத்தில் சுமார் 35 வெவ்வேறு தேர்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் நேற்று (திங்கட்கிழமை), தனது திருமணத்திற்கு முன்னதாக தேர்வு எழுத மணமகள் உடையில் பெண் ஒருவர் வந்தார்.
வருங்கால கணவர் மற்றும் குடும்பத்தினருடன் தேர்வெழுத வந்த மணமகளின் பெயர் ஷிவாங்கி பாக்தாரியா. தேர்வு முடிந்து மணமகள் நேரடியாக திருமண மண்டபத்தை அடைந்து திருமணத்திற்கான அனைத்து சடங்குகளையும் செய்து முடித்தார்.
தனது திருமண தேதி நிச்சயிக்கப்பட்ட போது, தேர்வுக்கான தேதி வெளியாகவில்லை என திருமணத்திற்குப் பிறகு ஷிவாங்கி கூறினார். ‘எனது தேர்வு தேதியும் திருமணத்தின் முஹூர்த்த நேரமும் ஒரே சமயத்தில் வந்தது எனது துரதிர்ஷ்டம். அதன் பிறகு, திருமண முஹூர்த்தத்தை மாற்றி அமைக்குமாறு நான் என் பெற்றோர் மற்றும் கணவரின் பெற்றோரிடம் கூறினேன். அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டு சிறிது நேரம் தள்ளி வைத்தனர். இதனால் என்னால் தேர்வு எழுத முடிந்தது’ என அந்த பெண் கூறினார்.
தற்போது வைரலாகும் மணப்பெண் (Bride) ஷிவாங்கியின் வீடியோவில், அவர் தேர்வு கூடத்தில் மும்முரமாக அமர்ந்து முழு கவனத்துடன் தேர்வு எழுதுவதைக் காண முடிகிறது. சுமார் அரை நிமிட நேரம் இருக்கும் இந்த வீடியோவில், அவர் தேர்வு அறையின் முன்புறம் அமர்ந்து, தொடர்ந்து மும்முரமாக எழுதுவதைக் காண்கிறோம்.
அந்த வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வீடியோ (Viral Video) சில மணிநேரங்களில் லட்சக்கணக்கான முறை பார்க்கப்பட்டது. ஏராளமான நெட்டிசன்கள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்துள்ளனர். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வைரல்பயானி என்ற பயனர் பகிர்ந்துள்ளார்.
இந்த மணப்பெண்ணுக்கு கல்வியின் மீது உள்ள ஆர்வம் நெட்டிசன்களை வியக்க வைத்துள்ளது. திருமணத்தை தள்ளி வைத்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது.
ALSO READ:Viral Video: இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணம், இப்ப போய் இப்படி செஞ்சா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR