டிராக்டரில் எண்ட்ரி கொடுத்து மாஸ் காட்டிய மணப்பெண்: மயங்கிப்போன இணையவாசிகள், வைரல் வீடியோ

Bride Entry Viral Video: இந்த வீடியோவில், அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில், முழு அலங்காரத்துடன் ஒரு கூலிங் கிளாசையும் அணிந்துகொண்டு, மணப்பெண் முழு ஸ்வேகுடன் கூலாக திருமண மண்டபத்துக்குள் எண்ட்ரி கொடுப்பதை காண முடிகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 1, 2022, 03:54 PM IST
  • குனிந்த தலையுடன் மணமண்டபத்துக்கு வருவது பழைய கதையாகி விட்டது.
  • இப்போது மணமகள் எண்ட்ரியில் பல வித்தியாசங்களை காண முடிகின்றது.
  • இந்த மணமகளும் மாஸாக தனது திருமணத்தில் எண்ட்ரி கொடுத்தார்.
டிராக்டரில் எண்ட்ரி கொடுத்து மாஸ் காட்டிய மணப்பெண்: மயங்கிப்போன இணையவாசிகள், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

இந்திய திருமணங்களுக்கு பல சிறப்பம்சங்கள் உள்ளன. அட்டகாசமான நடன அசைவுகள், கிண்டல் கேலிகள், கலாட்டா நிகழ்வுகள் என நமது திருமணங்களில் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. பொதுவாக தன்னுடைய திருமணத்தில் தன்னுடைய வருகை ஒரு பிரம்மாண்டமான முறையில் இருக்க வேண்டும் என திருமணம் புரிந்துகொள்ளும் மணமகள் நினைப்பது வழக்கம். வெட்கப்பட்டு, குனிந்த தலையுடன் தான் மணமகள் இருக்க வேண்டும் என்ற சிந்தனை பழங்கால சிந்தனையாகி விட்டது.

மேலும் படிக்க | Viral News: காதலனை கை பிடிக்க வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு நீந்தி எல்லை கடந்த காதலி 

தற்போது மணம் புரியும் பெண்கள், வழக்கமான பாணியை புறக்கணித்து புதுப்புது விதங்களில் திருமண நாளை அனுபவிக்க ஆசைப்படுகிறார்கள். பாலிவுட் பாடல்களுக்கு, குதிரை மேல், தேரின் மேல், ஊஞ்சலின் மேல் என பல விதங்களில் இந்த மணப்பெண்களின் எண்ட்ரி இருக்கிறது. இப்போதும் அப்படிப்பட்ட ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. 

இந்த வீடியோவில் ஒரு அழகான மணமகள் தனது திருமண மண்டபத்திற்கு டிராக்டரில் நுழைந்து பாரம்பரிய விதிமுறைகளை மாற்றியமைப்பதை காண முடிகின்றது. மத்தியப் பிரதேசத்தின் பெட்டூலில் இருந்து ஒரு மணப்பெண் தனது திருமணத்துக்கு டிராக்டரில் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது. 

ஊடக அறிக்கைகளின் படி, இந்த வீடியோவில் இருக்கும் மணமகள் பொறியியலாளராக பணிபுரிகிறார். இந்த வீடியோவில், அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில், முழு அலங்காரத்துடன் ஒரு கூலிங் கிளாசையும் அணிந்துகொண்டு, மணப்பெண் முழு ஸ்வேகுடன் கூலாக திருமண மண்டபத்துக்குள் எண்ட்ரி கொடுப்பதை காண முடிகின்றது. அவர் டிராக்டரை ஓட்டி வரும்போது அவரது இரு சகோதரர்களும் உடன் இருக்கிறார்கள். மணமகளின் இந்த அசாதாரண எண்ட்ரி விருந்தினர்களை திகைக்க வைத்தது.

மணமகளின் மாஸ் எண்ட்ரி வீடியோவை இங்கே காணலாம்:

அறிக்கையின்படி, பாரதி என்ற இந்த மணப்பெண் மே 26 அன்று மத்திய பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜாவ்ரா கிராமத்தில் திருமணம் செய்து கொண்டார். பல்லக்கிலோ காரிலோ மணமண்டபத்துக்குள் நுழைவது பழையதாகிவிட்டதால், தனது திருமண நாளில் வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்பியதாக பாரதி கூறினார்.

இந்த வீடியோ வைரலாகி, ஸ்வாக் மணமகள் பிரபலமாகி விட்டார். இவரது கூலான இயல்பை இணையவாசிகள் விரும்பி வருகிறார்கள். இந்த வீடியோவுக்கு ரியாக்ட் செய்த தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, "பாரதி ஒரு ஸ்வராஜை ஓட்டுகிறார் (ஒரு @MahindraRise பிராண்ட்)” என எழுதியுள்ளார். இந்த வீடியோ @Anurag_Dwary-ன் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Viral Video: மண்டை உடையும் அளவு சண்டை போட்ட கணவன் மனைவி, காரணம் என்ன 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News