Viral Video: நொடியில் முதலையின் ஆயுளை எடுத்த சிறுத்தை; மனம் பதற வைக்கும் வீடியோ!

இணைய உலகில் பகிரப்படும் வன விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் எளிதில் வைரலாகி விடும்.  தற்போது முதலை மற்றும் சிறுத்தை இடையேயான போராட்ட்டம் குறித்த  ஒரு வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.  முதலைகள் தண்ணீரில் மிகவும் ஆபத்தான உயிரினங்களாக கருதப்படும். முதலையை அதன் கோட்டைக்கே சென்று சிறுத்தை வீழ்த்திய வீடியோ சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 28, 2022, 02:47 PM IST
  • விலங்கு வேட்டை வீடியோக்கள் எளிதில் வைரலாகும்.
  • வைரலான வீடியோவில், சிறுத்தை காட்டுக்குள் முதலையை கவ்விக் கொண்டு செல்வதைக் காணலாம்.
  • சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ.
Viral Video: நொடியில் முதலையின் ஆயுளை எடுத்த சிறுத்தை; மனம் பதற வைக்கும் வீடியோ!  title=

இணைய உலகில் பகிரப்படும் வன விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் எளிதில் வைரலாகி விடும்.  தற்போது முதலை மற்றும் சிறுத்தை இடையேயான போராட்ட்டம் குறித்த  ஒரு வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.  முதலைகள் தண்ணீரில் மிகவும் ஆபத்தான உயிரினங்களாக கருதப்படும். முதலையை அதன் கோட்டைக்கே சென்று சிறுத்தை வீழ்த்திய வீடியோ சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளது. 

நம்மை அதிர்ச்சியில் உரைய வைக்கும் காட்சிகள் எல்லாம் வனப்பகுதிகளில் அடிக்கடி பார்க்கலாம். சிங்கம், சிறுத்தை  மற்றும் புலி ஆகிய பயங்கரமான விலங்குகள் நடத்து வேட்டை மிரட்சியை ஏற்படுத்தும். அப்படியான மிரட்சியை ஏற்படுத்தும் வேட்டை வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. நீரிலும் நிலத்திலும் திறமையாக வேட்டையாடும் திறன் பெற்றது முதலை. அதே நேரத்தில், சிறுத்தைகளும் மிகவும் ஆபத்தான விலங்கு. முதலையும் சிறுத்தையும் நேருக்கு நேர்  மோதிக் கொண்டால்  எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.  வனப்பகுதி அருகில் ஆற்றில் படகில் சென்றவர்கள் முதலையை சிறுத்தை வேட்டையாடும் சம்பவத்தை படம் பிடித்துள்ளனர்.

வைரலாகும் குறிப்பிட்ட காணொளியில், மறைந்திருக்கும் சிறுத்தை ஒன்று, வேட்டைக்காக காத்திருக்கும் நிலையில், தண்ணீருக்குள் பாயும் முதலை ஒன்றை கண்டதும், அதனை இரைக்க முடிவு செய்தது போலும். உன்னிப்பாக அதனை கவனிக்கும் சிறுத்தை, நொடிப்பொழுதில் முதலை தண்ணீருக்குள் பாய்ந்த சில நொடியில், முதலையை வாயில் கவ்வி மேலே இழுத்து வருகிறது. சிறுத்தையிடம் இருந்து  முதலை நினைத்து பார்க்கும் முன் அதன் ஆயுளை முடித்து விட்டது. 

மேலும் படிக்க | Viral Video: 1956 பிரிட்ஜில் இத்தனை அம்சங்களா... வியக்க வைக்கும் விளம்பரம்

வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்:

வைரலாகி வரும் இந்த வீடியோவில் ஜாகுவார் காட்டில் இரை தேடி அங்கும் இங்கும் அலைந்து கடைசியாக ஆற்றின் கரைக்கு வருவதை பார்க்கலாம். அங்கு ஒரு முதலை தண்ணீரில் நீந்துவதைப் பார்க்கிறது. சிறுத்தை தாமதிக்காமல் ஆற்றில் குதித்து முதலையைப் பிடிக்கிறது. இந்த நேரத்தில் முதலை  தப்பிக்க வழியில்லாமல் சிறுத்தையிடம் சிக்கிக் கொள்கிறது. பின்னர் சிறுத்தை அதனை காட்டிற்குள் இழுத்துச் செல்கிறது. அந்த வீடியோவில், சிறுத்தை முதலையை இழுத்துக் கொண்டு காட்டை நோக்கி செல்லும் விதத்தை பார்த்தால், முதலை உயிருடன் இல்லை என்றே தோன்றுகிறது. 

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News