Bizarre Comparison: ஹிஜாப் அணியாத பெண்கள் 'நறுக்கிய முலாம்பழம்'

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் தற்போது தங்கள் அதிகாரத்தை அங்கே நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கைப்பற்றியுள்ளனர். தங்களுடைய முந்தைய நிலைப்பாட்டோடு ஒப்பிடுகையில் தாங்கள் தற்போது கொள்கைகளை தளர்த்திக் கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 8, 2021, 02:14 PM IST
  • தாலிபான்களின் கடும்போக்கு
  • ஹிஜாப் அணியாத பெண்கள் 'நறுக்கிய முலாம்பழம்'
  • நேர்க்காணலில் தாலிபான் உறுப்பினர் கருத்து
Bizarre Comparison: ஹிஜாப் அணியாத பெண்கள் 'நறுக்கிய முலாம்பழம்'  title=

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் தற்போது தங்கள் அதிகாரத்தை அங்கே நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கைப்பற்றியுள்ளனர். தங்களுடைய முந்தைய நிலைப்பாட்டோடு ஒப்பிடுகையில் தாங்கள் தற்போது கொள்கைகளை தளர்த்திக் கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

ஆனால், அடிப்படை என்றென்றும் மாறாது என்பதை தங்கள் சொல்லாலும் செயலாலும் தாலிபன்கள் (Taliban) காட்டிக்கொண்டே இருக்கின்றனர்.  எனவே, அங்கே தற்போது பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்பது குறித்த கலவலைகள் எழுகின்றன.

இந்த கவலைகளை அதிகரிக்கும் விதமாக தற்போது தாலிபான் உறுப்பினர் ஒருவர் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அவரது கருத்துப்படி, ஹிஜாப் (Hijab) அணியாத பெண்கள், நறுக்கி துண்டுகளாக்கப்பட்ட தர்பூசணி என்கிறார். 

"நீங்கள் கடையில் தர்பூசணி, முலாம்பழம் வாங்கும்போது அப்படியே வாங்குவீர்களா? அல்லது வெட்டியதை வாங்குவீர்களா? ஹிஜாப் அணியாத ஒரு பெண் வெட்டப்பட்ட முலாம்பழம் போன்றவள்” என்று தாலிபன் உறுப்பினர் சொல்லியிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

வெளியிடப்பட்ட இந்த அபத்தமான கருத்துக் கொண்ட வீடியோ வைரலானவுடன், ட்விட்டர் பயனர்கள் இந்த கருத்துக்களுக்கு ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். சில எதிர்வினைகள்:

புதிய தலிபான் அரசு ஷரியா சட்டத்தை (sharia law) உறுதி செய்வதாக தெளிவுபடுத்தியுள்ளது. முல்லா முகமது ஹசன் அகுந்த் (Mullah Mohammad Hassan Akhund) நாட்டின் தலைவராக இருப்பார், முல்லா அப்துல் கனி பரதர் (Mullah Abdul Ghani Baradar) அடுத்த கட்டளைத் தலைவராக இருப்பார். இரண்டு பிரதிநிதிகள் மற்றும் 25 க்கும் மேற்பட்ட அமைச்சரவை அமைச்சர்கள் இருப்பார்கள் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னதாக, தாலிபான் கலாச்சார ஆணையம் வெளியிட்ட கடிதத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட இளம் பெண்கள் மற்றும் 45 வயதிற்குட்பட்ட விதவை பெண்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இது பல்வேறு விதமான அச்சங்களை ஏற்படுத்தியது.

taliban

தாலிபான்கள் இந்த பெண்களை, தங்கள் போராளிகளின் அடிமைகளாக்க விரும்புகிறார்கள். போராளிகள் இந்த பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவார்கள் என்று அஞ்சப்படுகிறது. அதுமட்டுமல்ல, பெண்கள் தனியாக வீட்டை விட்டு வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Also Read | இரத்தவெறி கொண்ட பயங்கரவாதி ஆப்கானின் புதிய உள்துறை அமைச்சர்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News