Viral Video: மயில் தோகை விரித்து ஆடி பார்த்திருப்பீங்க; சிலிர்த்து எழுந்து பார்த்திருக்கீங்களா!

இந்தியாவின் தேசிய பறவையாக இருக்கும் மயில்கள் மிகவும் கவர்ச்சியான பறவை என்றால் மிகையில்லை. தோகை விரித்து ஆடும் மயிலை ரசிக்காதவர்கள் இருக்க முடியுமா என்ன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 28, 2023, 02:29 PM IST
  • இணைய உலகத்தில், தினமும் பல சுவாரஸ்யமான வீடியோக்கள் பகிரப்படுகின்றன.
  • சில வீடியோக்கள் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன.
  • தற்போது மயில் ஒன்றின் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
Viral Video: மயில் தோகை விரித்து ஆடி பார்த்திருப்பீங்க; சிலிர்த்து எழுந்து பார்த்திருக்கீங்களா! title=

மயில்கள் நடனமாடுவதைப் பார்ப்பதே ஒரு அதிசயம். மிக அரிதாகவே கூட பார்க்க முடியும். இருப்பினும் சிலர் மயில் நடனம் ஆடுவதை பார்த்திருப்போம். இந்தியாவின் தேசிய பறவையாக இருக்கும் மயில்கள் மிகவும் கவர்ச்சியான பறவை என்றால் மிகையில்லை. தோகை விரித்து ஆடும் மயிலை ரசிக்காதவர்கள் இருக்க முடியுமா என்ன. ஆனால் மயில் சிலிர்த்து எழுவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா. அப்படி ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஆம். நீங்கள் முன்பு மயில் நடனம் ஆடும் வீடியோக்களை பார்த்திருக்கலாம் ஆனால் இப்போது இங்கே மயில் சிலிர்த்து எழும் வீடியோவையும் நீங்கள் காணலாம். இந்த வீடியோ தற்போது இணையத்தையே கலக்கி வருகிறது. இதைப் பார்த்தால் உங்களுக்கு வியப்பு மேலிடும் என்பதில் சந்தேகமே இல்லை. மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வீடியோ இதோ உங்களுக்காக. 

வைரல் வீடியோவை இங்கே காணலாம்:
 

பொதுவாக வானம் கருமேகங்களால் நிரம்பும்போது மயில் தோகை விரித்து ஆடும் என்பார்கள். அதேபோல் மற்ற எல்லாப் பறவைகளையும் போல மயில்கள் பறப்பதில்லை என்பதும் அனைவரும் நம்ப வேண்டிய உண்மையாகும். ஆனால் சில நேரங்களில் இந்த இயற்கையில் சில விசித்திரமான விஷயங்கள் நடக்கும். தற்போது வைரலாகி வரும் வீடியோவும் அதில் ஒன்று. மயில் நமது தேசிய பறவை ஆகும். மயிலின் அழகை எவ்வளவு வர்ணித்தாலும் குறைவுதான். இந்தியாவைத் தவிர, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் காங்கோவில் காணப்படும் அழகின் சுரங்கம் இந்த மயில். மயில் பறவைகளின் ராஜா என்றும் அழைக்கப்படுகிறது. 

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சில நாட்களுக்கு முன் வைரலாகிய கழுகு வேட்டை தொடர்பான மற்றொரு காணொளியில், கழுகு ஒன்று, தண்ணீரில் சீறிப்பாய்ந்து, மிக அழகாக வேட்டையாடுகிறது. நொடியில் அதை பிடித்து விடுகிறது. தண்ணீரில் பாய்ந்து வேட்டையாடிய மீனை மிகவும் கெட்டியாக லாபமாக, தனது அலகுகளால் பிடித்துக் கொள்கிறது.  மீன் பிடித்துக் கொண்டு வானத்தில் பறக்கும் அந்த கழுகு , சிறிதும் தாமதிக்காமல் அதனை பறந்து கொண்டே நடு வானில் சாப்பிட தொடங்குகிறது . நீரில் வேட்டையாடிய மீனை, தாமதிக்காமல் நொடி பொழுதில் வானில், மீன் உயிருடன் இருக்கும் போதே, ருசி பார்க்கும் அந்த கழுகின் ஆற்றலை கண்டு இணையவாசிகள் வியந்துள்ளனர். வைரலாகும் கழுகின் வீடியோவை கீழே உள்ள இணைப்பில் காணலாம்:

மேலும் படிக்க | Viral Video: வியக்க வைக்கும் ‘சூப்பர் ஸ்டார் கழுகு’... நீரில் மீன் வேட்டை... நடுவானில் மீன் விருந்து..!!

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | இறந்த தாயை எழுப்பும் குட்டி குரங்கு: இணையத்தை அழவைத்த இழப்பு.... வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News