அப்பா ராசா.. யாருப்பா நீ: முதலைகளுடன் நீச்சல்.. இணையத்தை தெறிக்கவிடும் சிறுவன், வைரல் வீடியோ

Funny Animal Video: இந்த வீடியோவை பார்த்தால் நிச்சயமாக நம் கண்களையே நம்மால் நம்ப முடியாது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 29, 2023, 10:29 AM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் tig_erworld என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன.
  • இனையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
அப்பா ராசா.. யாருப்பா நீ: முதலைகளுடன் நீச்சல்.. இணையத்தை தெறிக்கவிடும் சிறுவன், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

வனவிலங்குகள் தொடர்பான பல அதிர்ச்சி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளிவருகின்றன. இவற்றில் விலங்குகளுக்குள் நடக்கும் சண்டைகள், பாச பரிமாற்றங்கள் என இவை அனைத்தையும் நாம் காண்கிறோம். இது தவிர மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் இருக்கும் பிணைப்பும் இவற்றில் நமக்கு காணக்கிடைக்கின்றது. சில வீடியோக்கள் வேடிக்கையாக இருந்தாலும், இவற்றில் சில வீடியோக்களை பார்த்தால் நமக்கு பீதி பற்றிக்கொள்கின்றது.

அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. ஒரு சிறுவன் பல முதலைகள் இருக்கும் ஒரு நீர் தேக்கத்தில் குதித்து மிக ஜாலியாக குளிப்பதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. இந்த வீடியோவை பார்த்தால் நிச்சயமாக நம் கண்களையே நம்மால் நம்ப முடியாது. இப்படி ஒரு சிறுவன் செய்தார் என யாரேனும் கூறினால் நாம் கண்டிப்பாக நம்பி இருக்க மாட்டோம். ஆனால். இதை வீடியோவில் நேரில் பார்த்த பின்னால் நம்மால் நம்பாமல் இருக்க முடியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | ஓனம் ஸ்பெஷல்: கோழிக்கறி சர்ச்சையில் சிக்கிய போலீஸ் போட்ட ஓனம் டான்ஸ்

முதலைகளின் கூட்டத்திற்கு மத்தியில் குதித்த சிறுவன் 

வைரல் வீடியோவின் துவக்கத்திலேயே மிகவும் வித்தியாசமான ஒரு விஷயம் நடக்கின்றது. பொதுவாக முதலைகளை கண்டால் பெரியவர்களே அலறி அடித்துக்கொண்டு ஓடுவார்கள். ஏனெனில் முதலைகள் அத்தனை கொடூரமான மிருகங்கள். ஆனால், இந்த வீடியோவில் காணப்படும் சிறுவன், முதலை கூட்டத்தைப் பார்த்து பயங்கரமாக உற்சாகமடைவதை காண முடிகின்றது. 

சிறுவன் பயமின்றி தண்ணீரில் குதிக்கிறார். அதன் பிறகு அவர் செய்யும் செயல்கள் நம்மை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. வீடியோவில் முதலைகள் அதிகமாக காணப்படும் இடத்தில் சிறுவன் மிக கூலாக டைவ் அடிப்பதை காண முடிகின்றது. சிறுவனின் முகத்தில் அச்சத்தின் சாயலையே காண முடியவில்லை. சிரித்துக்கொண்டே நீச்சலடிக்கிறார். இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பல சிறிய முதலைகள் சிறுவனின் உடலில் அமர்ந்துள்ளன. இந்த வீடியோ உண்மையிலேயே அதிக அளவு வியப்பை தருகிறது. 

திகிலூட்டும் அந்த வீடியோவை இங்கே காணலாம்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by tig_erworld (@tig_erworld)

வீடியோ இணையத்தில் வைரல் ஆனது

இந்த  வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் tig_erworld என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.  இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இனையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.  சிலர் சிறுவனின் துணிச்சலை பாராட்டினாலும், இவ்வளவு கொடூரமான விலங்குகளான முதலைகளுக்கு மத்தியில் சிறுவனை விளையாட விட்ட பெற்றோரை பலர் விமர்சித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | தொண்டையில் கை விட்ட நபர்... நறுக்குனு கடித்த முதலை - வீடியோவ பார்த்தா பயந்துருவீங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News