Video: பெண்ணின் கண்ணில் 23 லென்ஸ் - வரிசையாக வெளியே எடுத்த மருத்துவர்கள் - அது எப்படி...?

ஒரு பெண்ணின் கண்ணின் உள்ளே இருந்து வரிசையாக மொத்தம் 23 லென்ஸ்களை மருத்துவர் எடுக்கும் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.   

Written by - Sudharsan G | Last Updated : Oct 14, 2022, 06:12 PM IST
  • இந்த வீடியோ கடந்த மாதம் பதிவிடப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவின் காலிஃபோர்னியாவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
  • அந்த மூதாட்டி ஏறத்தாழ ஒரு மாதம் அந்த 23 லென்ஸ்களுடன் இருந்துள்ளார்.
Video: பெண்ணின் கண்ணில் 23 லென்ஸ் - வரிசையாக வெளியே எடுத்த மருத்துவர்கள் - அது எப்படி...?  title=

கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி, இன்ஸ்டாகிராமில் கேடரினா குர்தீவா என்ற அமெரிக்க கண் மருத்துவர், வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். ஒரு மாதத்திற்கு முன் போட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, அந்த வீடியோவில், தன்னிடம் சிகிச்சை பெற வந்த பெண்ணின் கண்ணில் இருந்து, வரிசையாக 23 காண்டாக்ட் லென்ஸ்களை கேடரீனா வெளியே எடுப்பது பதிவாகியுள்ளது. 

மேலும் படிக்க | உல்லாசத்தால் உச்சம் தொட்ட மோசடி ராணி... பொறியில் சிக்கிய அரசியல் எலிகள் - யார் அந்த பெண்?

அந்த வீடியோவின் மீது,"ஒருவரின் கண்களில் இருந்து 23 காண்டாக்ட் லென்ஸ்கள் வெளியே எடுக்கப்பட்டது. எனது மருத்துவமனையில் நிகழ்ந்த உண்மை சம்பவம். உங்களின் லென்ஸ்களுடன் என்றும் தூங்கவே தூங்காதீர்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

இதுகுறித்து அவர் வீடியோவில்,"ஒருவர் இரவில் தனது காண்டாக்ட் லென்ஸை எடுக்க மறந்துள்ளார். லென்ஸை கண்ணில் இருப்பதையும் மறந்து மீண்டும் காலையில் புதிய லென்ஸை போட்டுள்ளார். இப்படியே 23 நாள்களாக தொடர்ந்து செய்து வந்துள்ளார். இது ஒரு அரிய சம்பவம். எனது மருத்துவமனையில் நேற்று (அதாவது செப். 12 அன்று) அனைத்து லென்ஸ்களையும் பாதுகாப்பாக வெளியே எடுத்தேன்" என பதிவிட்டுள்ளார். 

மூதாட்டியின் கண்ணில் இருந்து காண்டாக்ட் லென்ஸை வெளியே எடுக்கும் இந்த வீடியோ லட்சக்கணக்காணோரால் லைக் பார்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதை பகிர்ந்தும் வருகின்றனர். 

மருத்துவர் கேடரினா,"நான் அனைத்து காண்டாக்ட் லென்ஸ்களையும் கவனமாகப் எடுத்தேன், மொத்தம் 23. காண்டாக்ட் லென்ஸ்களைப் பிரிக்க, நகைக்கடைக்காரர்கள் பயன்படுத்துவதை போன்ற உபகரணத்தை பயன்படுத்த வேண்டியிருந்தது. ஒரு மாத காலமாக, கண்ணிமைக்கு அடியில் தேங்கிய அவை, ஒன்றுடன் ஒன்றாக நன்று ஒட்டியிருந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க | அட பச்ச கிழவி டா டேய்..ஏமாந்து போன காதலன்: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News