சென்னையில் நடைபெற்ற பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பை குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சிக்கும் வகையில் ட்விட்டர் பதிவு பதிவிட்டுள்ளார்.
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே அதிகாரபூர்வமற்ற 2-வது கட்டச் சந்திப்பு இன்று நடைபெற்றது. ஜி ஜின்பிங் வருகையையொட்டி சென்னை நகரில் மத்திய அரசும், தமிழக அரசும் பல்வேறு விதமான சிறப்பு ஏற்பாடுகள், தீவிரக் கண்காணிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செய்துள்ளனர்.
மேலும், இந்த சிறப்புமிக்க சந்திப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கிண்டல் செய்யும் விதமாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
#apdipodu moment ... ennum yenella paaknumo saamiiii ... #justasking pic.twitter.com/1iA4zMJUpS
— Prakash Raj (@prakashraaj) October 11, 2019
பாஜக கட்சியினரைத் தொடர்ச்சியாக விமர்சித்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், இந்தச் சந்திப்பைக் கிண்டல் செய்துள்ளது ஆச்சரியப்படும் விஷயம் இல்லை. இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் பிரகாஷ் ராஜ் குறிப்பிடுகையில்., "அப்படிப் போடு தருணம். இன்னும் என்னவெல்லாம் பார்க்கணுமோ சாமி!” என்று பதிவிட்டுள்ளார். பலரும் இந்தச் சந்திப்பைப் பாராட்டி வரும் நிலையில், பிரகாஷ்ராஜ் கிண்டல் செய்திருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனிடையே சமூக வலைதளத்தில் காலை முதலே #GoBackModi, #ModixijinpingMeet, #TNWelcomesModi, #TNWelcomesPMModi என பல ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.