அம்மாவுக்கு தாலாட்டுபாடும் சுட்டிக் குழந்தையின் வீடியோ வைரல்

தாய்க்கு குழந்தை தாலாட்டு பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியிருக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 26, 2022, 07:40 PM IST
  • தாய்க்கு தாலாட்டு பாடும் குழந்தை
  • இன்ஸ்டாகிராமில் வைரலான வீடியோ
அம்மாவுக்கு தாலாட்டுபாடும் சுட்டிக் குழந்தையின் வீடியோ வைரல் title=

தாய் மற்றும் குழந்தைக்கு இடையிலான பாசுமும், கொஞ்சலும் பார்ப்பதற்கு அலாதியானது. இருவரும் மாறி மாறி கொஞ்சிக் கொள்ளும் நிகழ்வை கண்ணெடுக்காமல் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம். அந்தளவுக்கு அவர்களுக்கு இடையில் ஏற்படும் இந்த உரையாடல் நெகிழ்வானதாக இருக்கும். உண்மையான அன்பை, மிதமிஞ்சிய அழகுடன் நீங்கள் அங்கே பார்க்கலாம். குழந்தை இருக்கும் வீடுகளில் இருவரும் நொடிப்பொழுது பிரியாமல் இருப்பார்கள். குழந்தையின் முழு உலகமே அவர்களாக இருப்பார்கள். 

தங்களின் பாசத்துக்குரிய மற்றும் நேசத்துக்குரிய குழந்தையை, விதவிதமாக கொஞ்சி விளையாடுவது மட்டும் தாயின் முழுநேர வேலையாக இருக்கும். அதுவரை பார்த்திராத செய்கைகளை எல்லாம் குழந்தையிடம் அந்த தாய் செய்து காட்டுவாள். இதற்கு மாறாக அந்த குழந்தை கொடுக்கும் சிரிப்பும், வெட்கமும் விலை மதிப்பிட முடியாத பொக்கிஷமாக இருக்கும். இவையெல்லாம் அனுபவித்தவர்களுக்கே தெரியும். கொஞ்சம் வளர்ந்த குழந்தையிடம் தாய் அவ்வப்போது சின்ன சின்ன சேட்டைகள் செய்து விளையாடுவார். அது இன்னும் கியூட்டாக இருக்கும்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rachel Flowers (@thesefourflowers)

இவ்வளவு நாள் உன்னை தாலாட்டி தாலாட்டி வளர்த்திருக்கேன். இப்போது உன் மடியை காட்டு நான் படுத்து தூங்குகிறேன் என குட்டி குழந்தையின் மடியில் தாய் படுக்கும்போது அந்த குழந்தை கொடுக்கும் ரியாக்ஷன் வேறலெவலாக இருக்கும். சிரிப்பை இயல்பாகவே வரவழைக்கக்கூடிய அந்த நிகழ்வில், திடீரென குழந்தை காட்டும் அன்பும், பாசமும் சுற்றியிருப்பவர்களை நெகிழச் செய்துவிடும். அப்படியான வீடியோ ஒன்று தான் இணையத்தில் வைரலாகியிருக்கிறது. கொஞ்சம் வளர்ந்த குழந்தையின் மடியில் தாய் சென்று படுக்க, அந்த குழந்தையும் தாயை புன் முறுவலோடு வரவேற்று, தாலாட்டுகிறது. இந்த வீடியோ இணைய வாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. குழந்தைக்கு இப்போது 3வயதாகிறதாம்.

ரேச்சல் ஃப்ளவர்ஸ் என்பவர் தான் அந்தக் குழந்தையின் தாய். இந்த வீடியோவை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இதுவரை சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை அந்த வீடியோ பெற்று, வைரல் லிஸ்டிலும் இடம்பிடித்துள்ளது. 

மேலும் படிக்க | நடுரோட்டில் பைக்கில் காதலர்கள் செய்த வெறிச்செயல்: வீடியோ வைரல்

மேலும் படிக்க | 75 இன்ச் ஸ்மார்ட் டிவியை விளையாட்டு பொருளாக்கிய குழந்தை; பதறிப்போன தாய் செய்த காரியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News