இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், நாளை நடைப்பெறவுள்ள நிதாஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு தயாராகி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெறும் முத்தரப்பு டி20 தொடர் கொழும்புவில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் நாளை மோதுகின்றன.
முன்னதாக நேற்று நடைப்பெற்ற 6 வது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின. வெற்றிப்பெறும் அணி மட்டுமே இறுதி ஆட்டத்திற்கு முன்னேறும் என்ற இக்கட்டாண நிலையில் களம் இரங்கிய இரண்டு அணிகளும் கடுமையான போட்டியினை வெளிப்படுத்தின. இப்போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று இறுதி ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்ள தயாராகியுள்ளது.
இந்நிலையில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வரும் வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. நெட்டீசன்கள் இந்த வீடியோவிற்கு பல சுவாரஸ்ய தலைப்புகளை அளித்து பகிர்ந்து வருவது அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது!
Whenever you find yourself doubting how far you can go, just remember how far you have come. Trust yourself to come out victorious in every difficult situation in life. Spend time with yourself to keep improving and believing that you too can make it big in life! pic.twitter.com/9prRed6wuY
— Shikhar Dhawan (@SDhawan25) March 17, 2018