புதுடெல்லி: நமது கிரகத்தைச் சுற்றியுள்ள விண்வெளியில் குப்பைகள் வேகமாக சேருவதில் ஆச்சரியமில்லை. 'விண்வெளிப் போரில்' ஒன்றுடன் ஒன்று போட்டி போடும் பல நாடுகளும் நமது கிரகத்தைச் சுற்றி தங்கள் செயற்கைக்கோள்களை நிறுத்தியுள்ளன.
இந்த செயற்கைக்கோள்களும் தொழில்நுட்பமும் விண்வெளியை குப்பைகளால் நிரப்பிவிட்டன. பூமியைச் சுற்றி அதிகரித்து வரும் இந்த குப்பைகள் எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சிக்கு ஒரு தடையாக மாறும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
துப்புரவு முயற்சியை முன்னெடுக்கும் பிரிட்டன்...
இந்த விண்வெளிக் குப்பைகளை சுத்தம் செய்வதற்கான முயற்சிகளை தற்போது பிரிட்டன் தொடங்கியுள்ளது. பிரிட்டனின் வணிகச் செயலாளர் அலோக் சர்மா சமீபத்தில் நாட்டின் விண்வெளி நிறுவனமான யுகேஎஸ்ஏ (UKSA) மூலம் விண்வெளிக் கழிவுகளை சுத்தம் செய்வதற்கான நிதியை அறிவித்தார். (12,96,880 டாலர்கள்) இந்த நிதி விண்வெளி குப்பைகளை சுத்தம் செய்ய 1 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குப்பைகளை அகற்றுவதற்கான உறுதியான வழி எதுவும் இதுவரை முடிவு செய்யப்படவில்லை.
பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் குப்பைகள் பரவுவதால் பல விஞ்ஞானிகள் கவலைப்படுகிறார்கள், ஏனெனில் இது சர்வதேச விண்வெளி நிலையம் ஐ.எஸ்.எஸ்-க்கு (ISS) ஊறு விளைவிக்கக்கூடும்.
விண்வெளியில் உள்ள எல்லாவற்றின் அளவும் மிகவும் முக்கியமானது. உதாரணமாக, விண்வெளியில் இருக்கும் சிறிய அளவிலான குப்பைகளைக் கண்டறிவது கடினமாக இருப்பதால் அவை மிகவும் தீங்கு செய்யும் அபாயங்கள் அதிகமாக உள்ளது.
தகவல்களின்படி, பூமியைச் சுற்றி, விண்வெளியில் சுமார் 16 மில்லியன் குப்பைகள் உள்ளன. இவை நமது பூமிக் கிரகத்தின் ஈர்ப்பு விசையால் 18 ஆயிரம் மைல் வேகத்தில் கிரகத்தைச் சுற்றி வருகின்றன.
இது மட்டுமல்லாமல், இந்த 16 கோடி துண்டுகளில், குறைந்தது 10 லட்சம் துண்டுகள் 1 சென்டிமீட்டரை விட பெரியவை, அவை செயற்கைக்கோள்களுடன் மோதுவதற்கான ஆபத்து எப்போதும் உள்ளது.
இத்தகைய குப்பைகள் அழிவை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கவலைப்படுகிறார்கள். அதாவது, ஒரு செயற்கைக்கோளின் மீது விண்வெளியில் இருக்கும் குப்பைகள் மோதினால் ஏற்படும் சேதமானது, உலகளாவிய செயற்கைக்கோள் தொழில்நுட்பத்திற்கு மாபெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.
நாங்கள் சொல்வதன் பொருளை நீங்கள் ஓரளவுக்கு மட்டுமே நீங்கள் யூகிக்க முடியும், நமது செயற்கைக்கோள் இணைப்பு கடுமையாக சேதமடைந்தால், வரைபட தொழில்நுட்பத்தை (map technology) இழந்துவிடுவோம். இந்தத் தொழில்நுட்பமே, பல்வேறு வகையிலான போக்குவரத்தை முழு உலகிலும் சுலபமாக்கியுள்ளது. இதேபோல், மொபைல் தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு போன்ற பல விஷயங்களுக்கும் செயற்கைக்கோள்களே அடிப்படை ஆகும்.
குப்பைகள், நாட்டில் இருந்தாலும், வீட்டில் இருந்தாலும், விண்வெளியில் இருந்தாலும், மனதில் இருந்தாலும் அவை ஏற்படுத்தும் சேதாரங்கள் அளவிடமுடியாதது...
- Dubai: விமானத்தில் Corona நோயாளி இருந்த்தால் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து
-
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR