ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் புகுஷிமா டாய்-இச்சி அணுமின் நிலையத்தைச் (Fukushima Dai-ichi nuclear plant) சுற்றியுள்ள கதிர்வீச்சு அளவை கண்காணிக்க பாம்புகளை பயன்படுத்துகின்றனர்.
ஜப்பானில் 2011ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, டாய்-இச்சி அணுமின் நிலையத்தின் அனைத்து உலைகளும் செயல்பாடுகளை நிறுத்தின. ஒன்றாம் எண் உலையில் குளிரூட்டும் முறைகள் தோல்வி அடைந்ததால், வெப்பம் அதிகரித்து, வெடிவிபத்து ஏற்பட்டது. உலையின் உட்புறத்தில், அணுக்கரு பிளப்புக்குத் தேவையான மூலப் பொருட்களான சீசியம் 137, ஐயோடின் 131 போன்ற தனிமங்கள் கண்டறியப்பட்டன.
அதுமட்டுமல்ல, அணுக் கழிவு கலந்த நீர் வெளியேறியதால் அணுக்கதிர் வீச்சு அபாயம் ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்டு டாய் இச்சி அணுமின் நிலையத்தை ஒட்டி 20 கி.மீ., சுற்றுவட்டாரத்தில் வசித்த சுமார்150,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
ALSO READ | Snake Poison as Covid Drug: பாம்பின் நஞ்சு, கோவிட் தொற்றுநோய்க்கு சிறந்த மருந்தாகலாம்!
அப்போது, ஜப்பான் அணுசக்தி பாதுகாப்பு முகமை நிர்ணயித்திருந்த சட்டப்பூர்வ கதிர்வீச்சு அளவை விட மும்மடங்கு அதிக கதிர்வீச்சுகள் வெளியாகின. எனவே, இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ள விஞ்ஞானிகள் அணு உலையில் நீண்டகால கதிர்வீச்சு வெளிப்பாட்டைப் புரிந்துகொள்வதற்காக பாம்புகளுக்கு கண்காணிப்பு சாதனங்கள் மற்றும் டோசிமீட்டர்களை பொருத்தியுள்ளனர்.
இந்த ஆய்வு தொடர்பாக இக்தியாலஜி மற்றும் ஹெர்பெட்டாலஜி சஞ்சிகையில் (Ichthyology and Herpetology journal) வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக பாலூட்டிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி, தற்போது பாம்புகள் மீது மேற்கொள்ளப்படுகின்றன.
"பாம்புகள் சுற்றுச்சூழல் அமைப்புகளில் முக்கியமானவை, ஏனெனில் அவை வேட்டையாடுப்வையாகவும், இரையாகவும் இருக்கின்றனர்" என்று இந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளவர்களில் ஒருவரான ஹன்னா கெர்கே தெரிவித்தார்.
ALSO READ | Neanderthals: மனிதர்களுடன் உடலுறவு கொண்டதால் நியண்டர்டால்கள் அருகியிருக்கலாம்: ஆய்வு
அவரது குழு 134 முதல் 137 ரேடியோசியம் (radiocesium) வரையிலான கதிர்வீச்சு அளவை கண்காணிக்க முடிந்தது. இந்த சோதனைக்காகப் பிடிக்கப்பட்ட எலி மற்றும் பாம்புகளின் இயக்கம் மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்தது இது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், ஆலையின் விலக்கு மண்டலத்திற்குள் இருக்கும் பாம்புகள், வெளியில் இருப்பவற்றுடன் ஒப்பிடுகையில் 22 மடங்கு அதிகமாக ரேடியோசியத்தின் அளவைக் காட்டியுள்ளன என்று கெர்கே கூறினார்.
ஜப்பானில் வாழும் மக்கள் இந்த மண்டலத்தில் வாழ வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் கதிர்வீச்சினால் அவர்களுக்கு தீங்கு ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR