Antarctica பனியின் மேல் வினோதமான தடங்களை கண்டு குழம்பும் NASA

அண்டார்டிகாவில் மேல் ஆயிரக்கணக்கான கிலோமீடர் பரப்பளவில் படர்ந்து இருக்கும் பனியில் காணப்படும் வினோதமான தடங்களை கண்டு குழம்பி போயுள்ள நாசா விஞ்ஞானிகள் இது குறித்த ஆராய்ச்சியை தொடக்கியுள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 24, 2021, 03:15 PM IST
  • அண்டார்டிகா பனியின் மேல் காணப்படும் விசித்திரமான தடங்கள் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
  • நாசா விஞ்ஞானிகள் இது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
  • இருப்பினும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.
Antarctica பனியின் மேல் வினோதமான தடங்களை கண்டு குழம்பும் NASA title=

வாஷிங்டன்: விஞ்ஞானிகளுக்கு அண்டார்டிகா (Antarctica)மீண்டும் ஒரு சவாலை முன்வைத்துள்ளது. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் சதுர பரப்பளவில் வெள்ளை போர்வையாக பரவியிருக்கும் பனியின் விசித்திரமான தடங்கள் காணப்படுகின்றன. இந்த வடிவத்தைப் பார்க்கும்போது, ஏதோ ஒரு உருவம் அல்லது பொருள் ​​வேகமாக சறுக்கிக் கொண்டே கீழ்நோக்கி இறங்கி வந்துள்ளதைப் போல் தெரிகிறது. 

நாசா (NASA) விஞ்ஞானிகள் பனிக்கு மேலே இந்த மைல் நீளமான தடம் குறித்துஆராய்ந்து வருகின்றனர், ஆனால் இன்னும் இது குறித்து முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

ஏதோ ஒரு பொருள் அல்லது உருவம், வேகமாக வந்து மோதி சறுக்கிக் கொண்டு கீழே சென்றதால், இந்த தடம் ஏற்பாடிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஒரு பொருள் வேகமாக வந்து மோதினால், இப்படி இருக்க வாய்ப்புண்டு என நிபுணர்களும் ஊகிக்கின்றனர். இது ஒரு அரிய பனிப்பாறை (Glacier) என கூறியுள்ள நாசா  விஞ்ஞானி டாக்டர் கெல்லி ப்ரண்ட், மெக்முர்டோ சவுண்ட் பகுதியில் உறைந்த கடலில் ஏழு மைல் நீளத்தில் இது பனிப்பாறை காணப்படுகிறது என்றார்.

பல ஆண்டுகளுக்கு முன் மில்லியன் கணக்கான டன் பனிக்கட்டிகளால் ஆன அரிய வகை பனிப்பாறையில்,  விமானம் ஒன்று விபத்திற்குள்ளானது. 

நவம்பர் 28, 1979 அன்று, ஏர் நியூசிலாந்து (Newzealand) விமானம் ஆக்லாந்து விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, விமானம் எரேபஸ் மலையை நெருங்கியபோது, ​​விமானிகள்  எல்லா இடங்களிலும் படர்ந்திருந்த வெள்ளை பனியின்பால் குழம்பி போய் விட்டனர். விமானம் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தின் 20 பணியாளர்கள் மற்றும் 237 பயணிகள் கொல்லப்பட்டனர். அப்போதிருந்து, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் அண்டார்டிகாவில் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ | பிரதமர் மோடிக்கு நன்றி என சஞ்சீவினியை தூக்கும் ஹனுமன் படத்துடன் பிரேசில் அதிபர் ட்வீட் ..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News