Lunar Eclipse: இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று

இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழவிருக்கிறது. இதற்கு முன்னதாக இந்த ஆண்டில் இதுவரை மூன்று சந்திர கிரகணங்கள் நிகழ்ந்தன. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி செல்லும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 30, 2020, 11:21 AM IST
  • இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று
Lunar Eclipse: இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று title=

புதுடெல்லி: இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழவிருக்கிறது. இதற்கு முன்னதாக இந்த ஆண்டில் இதுவரை மூன்று சந்திர கிரகணங்கள் நிகழ்ந்தன. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி செல்லும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. 

சந்திர கிரகணத்தில் மூன்று வகைகள் உள்ளன. மொத்த சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம் மற்றும் பெனும்பிரல் கிரகணம் (penumbral eclipse) ஆகும். இந்த வகை கிரகணத்தில் பூமியின் முக்கிய நிழல் சந்திரனை மறைக்காது.  

கிரகணங்களுடன் தொடர்புடைய பல நம்பிக்கைகள் உலகம் முழுவதும் நிலவுகின்றன. கிரகண காலத்தில் பொதுவாக பணிகள் எதையும் செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று இந்தியாவில் நம்பிக்கை உண்டு. அதிலும், கருவுற்றிருக்கும் பெண்கள், கிரகண காலத்தில் வீட்டிற்குள்ளே இருக்க வேண்டும், வெளி வெளிச்சம் அவர்களுக்கு படக்கூடாது என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.  கர்பிணிகள் அந்த நேரத்தில் சாப்பிடவும் வேண்டாம் என்று அறிவுறுத்துவார்கள். அனைவரும் உணவை சமைக்கவோ, சாப்பிடவோ வேண்டாம் என்றும் கூறப்படுகிறது.

2020 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஜனவரி 10 அன்று நிகழ்ந்தது. ஜூன் 5ஆம் தேதியன்று இரண்டாவது கிரகணமும், மூன்றாவது சந்திர கிரகணம் ஜூலை மாதத்திலும் ஏற்பட்டன. இன்று நவம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று இந்த ஆண்டின் இறுதி மற்றும் நான்காவது சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது.

Also Read | ஒவ்வொரு நாளும் சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும்?​

இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1:02 மணியளவில் தொடங்கும் கிரகணம், பிற்பகல் 3:12 மணிக்கு உச்சத்தை அடையும், மாலை  5:23 மணிக்கு முடிவடையும் என்று கூறப்படுடுகிறது.

இன்றைய கிரகணம் உலகின் பல பகுதிகளிலும் பீவர் மூன்  (Beaver Moon) என்று அழைக்கப்படுகிறது. இது போல, மூன்று நாட்களுக்கு முழுதாக தோன்றும். சனிக்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை. திங்கட்கிழமை அதிகாலை 4:30 மணிக்கு (EST) ஒரு கணம் முழுமையாக இருக்கும்.

பெனும்பிரல் கிரகணம் (penumbral eclipse) என்றால் என்ன?
புவியின் நிழலை கருநிழல் (Umbra) மற்றும் புறநிழல் (Penumbra) என்று இருவேறு பகுதிகளாகப் பிரிக்கலாம்.  கருநிழலிற்குள், நேரடியாக கதிரவனின் கதிர்கள் ஏதும் இருக்காது. எனினும், கதிரவனின் பெரிய கோண அளவினால், சூரியக் கதிர்கள், புவியின் நிழலின் வெளிப்புறப் பகுதியில் ஓரளவிற்கு மட்டுமே தடுக்கும். எனவே இது புறநிழல் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.புறநிழல் சந்திர கிரகணம் அதாவது பெனும்பிரல் கிரகணம் (penumbral eclipse) என்பது புவியின் புறநிழல் வழியாக நிலவின் ஒரு பகுதி கடந்து செல்லும் போது ஏற்படுகிறது. அப்போது நிலவின் பகுதி இருண்டு காணப்படும். புவியின் புறநிழலை சந்திரன் கடந்து செல்லும் போது ஏற்படும் கிரகணம் penumbral eclipse.  

இன்றைய சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாது

விண்வெளி ஆர்வலர்கள் மற்றும் வானில் நிகழும் மாற்றங்களை காண விரும்புபவர்கள், இந்த 2020 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணத்தைக் காண உலகெங்கிலும் சேரக்கூடும். வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் இந்த சந்திர கிரகணத்தைக் காணலாம். இந்தியாவில் வசிப்பவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது.

தொடர்புடைய செய்தி | சந்திர கிரகணம் 2020: நேரம், பரிகாரம் செய்ய வேண்டிய ராசி, நட்சத்திரத்திரங்கள் எவை?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News