என்னது? ஏலியன்கள் பூமியை சுலபமா கண்டுபிடிச்சிடுவாங்களா? அதிரவைக்கும் ஆய்வு

Aliens can Find Human Beings Easily: பூமியில் வசிப்பவர்களை கண்டறிய ஏலியன்கள் "மைக்ரோலென்சிங்" முறையை பயன்படுத்தலாம் என வானியல் ஆராச்சியாளர்களின் குழு கண்டறிந்துள்ளது!

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 17, 2022, 09:49 AM IST
  • பூமியை கண்டுபிடிப்பது ஏலியன்களுக்கு சுலபம்
  • ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வானியல் ஆராய்ச்சி
  • மைக்ரோலென்சிங் முறையை பயன்படுதி உயிரினங்களை கண்டறிவது சுலபம்
என்னது? ஏலியன்கள் பூமியை சுலபமா கண்டுபிடிச்சிடுவாங்களா? அதிரவைக்கும் ஆய்வு title=

பிரபஞ்சத்தில் வேற்றுகிரகவாசிகள் இருப்பதை கண்டறிய பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் பிரம்ம பிரயத்தனம் செய்து வருகின்றனர். தொலைதூர விண்மீன் திரள்களைத் தேடும் பிரம்மாண்ட செயற்கைக்கோள்கள் முதல் வானொலி ஒலிபரப்புகளை அண்டத்திற்கு அனுப்புவது வரை என பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எவ்வளவு முயற்சித்தாலும், பெரிய அளவில் பயன் ஏதும் கிடைக்கவில்லை என்றாலும், விஞ்ஞானிகள் தொடர்ந்து வெவ்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக, இந்த பிரபஞ்சத்தில் வேற்றுகிரகவாசிகள் நம்மை எவ்வாறு கண்டுபிடிப்பார்கள் அல்லது தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள் என்பதைக் கண்டறியும் ஆய்வுகள் நடைபெறுகின்றன.

ஜப்பான், தாய்லாந்து, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வானியலாளர்கள் குழு, ஏலியன்கள் நமது இருப்பைக் கண்டறியும் வழிகளைக் கண்டறிய, "மைக்ரோலென்சிங்" எனப்படும் செயல்முறையை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ஏலியன்களின் இருப்பை உறுதிப்படுத்துகிறதா ரேடியோ சிக்னல்

"கோட்பாட்டில், மைக்ரோலென்சிங் போன்ற நீண்ட தூர கண்டறிதல் முறையானது, பிரபஞ்சத்தில் இருக்கும் நமது பூமியைக் கண்டறிய வேற்று கிரகவசிகளால் பயன்படுத்தப்படலாம்" என்று இந்த விஞ்ஞானிகள் குழுவின் ஆய்வு அறிவுறுத்துகிறது. விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ராயல் வானியல் சங்கத்தின் மாதாந்திர அறிக்கை தெரிவிக்கிறது.

சக்திவாய்ந்த நுண்ணோக்கிகள் மூலம் ஆய்வும் செய்வதன் மூலம் தொலைதூர கிரகங்கள் அல்லது நட்சத்திரங்களைக் கண்டறிய மைக்ரோலென்சிங் செயல்முறை பயன்படுத்தப்படுகிறது.

மைக்ரோலென்சிங் என்றால் என்ன?
ஒரு மிகப்பெரிய பொருள், நட்சத்திரங்களுக்கு முன்னால் செல்லும்போது அருகில் உள்ள பொருளின் ஈர்ப்ப்புப் புலம் தொலைதூர நட்சத்திரங்களின் வெளிச்சத்தை பெரிதாக்குகிறது. அதாவது லென்ஸ் போல செயல்படுகிறது. இதனால் ஏற்படும் ஒளி வளைவாக இருக்கும். நட்சத்திரத்தின் ஒளி, ஒளிர்வது மற்றும் மறைவது ஆகியவற்றைக் கொண்டு அவதானிக்கும் அறிவியலாளர்கள் இவற்றில் பெரும்பாலும் நட்சத்திரம் ஒன்று தென்படுவதாக கூறுகின்றனர். 

மேலும் படிக்க | வேற்றுகிரகவாசிகள் இருப்பை உறுதி செய்கிறதா ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

இந்த நட்சத்திரங்களில் கிரகங்கள் ஏதேனும் இருந்தால், அவை இரண்டாம் நிலை ஒளி வளைவுகளை உருவாக்கும்போது, அவற்றின் இருப்பை விஞ்ஞானிகள் அறிந்துக் கொள்வார்கள். மைக்ரோலென்சிங் என்பது நட்சத்திரங்களில் இருந்து ஒப்பீட்டளவில் வெகுதொலைவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எந்த வேற்று கிரக நாகரிகமும் அதாவது ஏலியன்கள், பால்வீதியை ஆய்வு செய்தால் நமது கிரகத்தை கண்டறிய முடியும் என்றும்,  நட்சத்திரங்களின் நிலையைப் பொறுத்து பூமி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிரகாசமாக பிரகாசிக்கும் என்றும் ஆய்வில் விளக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வேற்றுகிரகவாசிகள் அதே அளவிலான தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்பதும், அவர்களுடைய தொழில்நுட்பம் பூமியில் பயன்படுத்தப்படுவதைப் போலவே இருக்குமா என்பதன் அடிப்படையிலேயே, ஏலியன்கள் பூமியை எளிதாக தொடர்பு கொள்ள முடியுமா என்ற கேள்விக்கான பதில் அடங்கியுள்ளது.

மேலும் படிக்க | 40 மில்லியனுக்கும் அதிகமான விண்மீன்களை வகைப்படுத்திய நாசா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News