தமிழகத்தின் எல்லைக்கு வந்தது ராம ராஜ்ய ரத யாத்திரை!

கேரளாவில் இருந்து தமிழகத்தின் நெல்லை மாவட்ட எல்லையான கோட்டை வாசல் பகுதிக்கு ராமராஜ்ய ரத யாத்திரை வந்தது. 

Last Updated : Mar 20, 2018, 10:09 AM IST
தமிழகத்தின் எல்லைக்கு வந்தது ராம ராஜ்ய ரத யாத்திரை! title=

விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை அயோத்தியில் துவங்கி 5 மாநிலங்களை கடந்து இன்று (மார்ச் 20) காலை தமிழகம் வருகிறது.

நேற்று இரவு கேரள மாநிலம் புனலுாரில் ரத யாத்திரைக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இன்று காலை ரத யாத்திரைக்கு நெல்லை மாவட்டத்தின் எல்லையான புளியரையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனை தொடா்ந்து செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூா், வாசுதேவநல்லூா் வழியாக விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தை அடைகின்றது. பின்பு மதுரைக்கு செல்கிறது. இவ்வாறு ரத யாத்திரை வரும் 25-ம் தேதி ராமேஸ்வரத்தில் நிறைவு பெறுகிறது. 

இந்த ரத யாத்திரைக்கு திமு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனா். ரத யாத்திரை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளன. இந்நிலையில், ரதயாத்திரைக்கு தடை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

யாரும் போரட்டத்தில் ஈடுபடதாவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாவட்டம் முழுவதுதம் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கி வருகிற 23-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அம்மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி பிறப்பித்துள்ளார். மேலும் ரத யாத்திரை செல்லும் வழியெங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன் எச்சரிக்கையாக ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடயிருந்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தை கட்சி, தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் 10 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர். 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கைது செய்துள்ளதை அடுத்து, ஜவாஹிருல்லா, வேல்முருகன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். 

Trending News