காங்கிரஸ் சாதனைகளை உரிமை கொண்டாடுகிறது பாஜக -ராகுல்!

போலி வாக்குறுதிகளால் ஆட்சிக்கு வந்த பாஜக என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜக-வினை சாடியுள்ளார்!

Last Updated : Apr 29, 2018, 08:54 PM IST
காங்கிரஸ் சாதனைகளை உரிமை கொண்டாடுகிறது பாஜக -ராகுல்! title=

போலி வாக்குறுதிகளால் ஆட்சிக்கு வந்த பாஜக என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜக-வினை சாடியுள்ளார்!

60 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியால் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் அனைத்தினையும் தங்களுக்கு உரியதாய் காட்சிப்படுத்துகிறது பாஜக என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவால் தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளதாவது... "இந்தியாவில் 6,49,867 கிராமங்கள் உள்ளன. இதில் 97% கிராமங்களுக்கு மின்சாரம் வசதி ஏற்படுத்தி கொடுத்தது காங்கிரஸ் ஆட்சி தான். காங்கிரஸ் ஆட்சியின் (2004-14) காலகட்டத்தில் மட்டும் சுமார் 1,07,600 கிராமங்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது

சராசரியாக பார்த்தால் காங்கிரஸ் ஆட்சியில் ஆண்டிற்கு 10000 கிராமங்கள் மின்சார வசதி பெற்றுள்ளது. ஆனால் ஆளும் பாஜக ஆட்சியால் இதுவரை ஆண்டிற்கு 4,813 கிராமங்களுக்கு மட்டுமே மின்சார சேவையினை வழங்க முடிந்தது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியால் மக்களுக்கு கொடுக்கப்பட்ட சேவையினை தங்கள் ஆட்சியில் கொடுத்த சேவைகளாக பாஜக உரிமை கொண்டாடுவது நியாயமற்றது" என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இன்று புதுடெல்லியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜன் ஆக்ரோஷ் ரேலி என்னும் பெயரில் மாபெரும் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி தெரிவிக்கையில்... "நாட்டில் அனைத்து துறைகளும் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதற்கு காரணம் காங்கிரஸ் ஆட்சி இல்லாதது தான். நான் எங்கு சென்றாலும், யாரை சந்தித்தாலும், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என்று கேட்பேன். இதுவரை இல்லை என்று பதில் மட்டுமே நான் அவர்களிடன் இருந்து பெற்றுள்ளேன். இது பாஜக அரசின் மீது மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர் என்பதை வெளிகாட்டுகிறது. 

இதன் வெளிப்பாட்டினை அடுத்தாண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வெளிகாட்டுவார்கள். அந்த தேர்தலில் மட்டுமல்ல அதற்கு முன் வரும் கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேச சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும்" என தெரிவித்துள்ளார்!

Trending News