Yoga Asanas For Thigh Fat Reduction: உடல் எடை அதிகரிப்பு நம்மில் பலரிடம் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக, தொப்பை, தொடை, இடுப்பு ஆகிய இடங்களில் கொழுப்பு சேர்ந்துவிட்டால், அதை அகற்றுவது பிரம்மபிரயத்னமாகவே உள்ளது.
Yoga Asanas For Thigh Fat Reduction: தொப்பை கொழுப்பை (Belly Fat) பற்றி அதிகம் பேசப்படுகின்றது. ஆனால், தோடையில் சேரும் கொழுப்பும் அதே அளவு ஆபத்தானது. இதை கரைக்க யோக ஆசனங்கள் பெரிய அளவில் உதவும். எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல், இயற்கையான வழியில் உடல் எடையை குறைத்து ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையு ம் மேம்படுத்த யோகாசனகள் போன்ற ஒரு நல்ல வழி இருக்க முடியாது. தொடை கொழுப்பை குறைக்க உதவும் சில ஆசனங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
தொடை கொழுப்பு அதிகரிக்க பல காரணங்கள் உள்ளன. உடல் எடை அதிகரிப்பு, நமது வாழ்க்கை முறை, மரபியல், உணவு முறை, பாலினம், ஆகிய காரணங்களால் தொடைகளில் கொழுப்பு அதிகரிக்கத் தொடங்குகிறது. மேலும் வயதாக ஆக, வளர்சிதை மாற்ற விகிதம் குறைந்து அதன் காரணமாகவும் தொடையில் சேரும் கொழுப்பு அதிகமாகலாம்.
தொடையில் சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பை குறைக்கவும், கால்களின் வலிமையை அதிகரிக்கவும், யோகாசனங்கள் சிறந்த வழியாக கருதப்படுகிறன. இந்த ஆசனங்களில் தசை நீட்சி மற்றும் சுருங்கும் செயல்முறை இரண்டும் நடப்பதால், இவை எடை இழப்புக்கும் உதவுகின்றன. தசை செயல்பாட்டின் போது கொழுப்பு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த வகையில் அதிக கொழுப்பு எரிந்து உடல் எடையும் குறைகிறது.
இதை செய்ய முதலில் முதுகை நேராக வைத்து, உங்கள் கன்னத்தை சிறிது உயர்த்தவும். சமநிலைக்கு வந்து, மெதுவாக கைகளை இணைத்து அவற்றை மேலே உயர்த்தவும். ஒரு காலை முன்பக்கத்தில் 90 டிகிரியில் வைத்து மற்றொரு காலை நீட்டி பின்னோக்கி நகர்த்தவும். உங்கள் முதுகு நேராக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் எடை முழுவதும் உங்கள் இரு கால்களிலும் சமமாக இருக்க வேண்டும். கண்கள் கைகளை பார்த்தபடி இருக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து கால்களை மாற்றி இதை செய்யவும்.
முதலில் நேராக நிற்கவும். அதன் பிறகு மூச்சை ஆழமாக எடுத்து, இடது காலின் முழங்காலை வளைத்து, அதை பின்னோக்கி நகர்த்தி, இடது கையால் கால்விரலைப் பிடிக்கவும். இடது காலை முடிந்தவரை உயர்த்தவும். அதன் பிறகு மேல் உடல் பகுதியை முன்னோக்கி வளைக்கவும். பிறகு வலது கையை நேராக முன்னோக்கி நீட்ட முயற்சிக்கவும். இந்த நிலையில் சில நொடிகள் இருங்கள். அதன் பிறகு மீண்டும் துவக்கத்தில் இருந்த நிலைக்கு வரவும். மற்ற கால் கொண்டு இதே செயல்முறையை செய்யவும்.
முதலில் தரையில் நேராக நிற்கவும். இரண்டு கால்களையும் விரிக்கவும். பிறகு இரு கைகளையும் முன்னோக்கி நீட்டவும், உள்ளங்கையை கீழ்நோக்கி வைக்கவும். உங்கள் கைகளை நேராக வைத்திருங்கள். மெதுவாக முழங்கால்களை வளைத்து, இடுப்பை கீழ்நோக்கி நகர்த்தவும். இந்த வேளையில் நீங்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பது போல் உங்கள் போஸ் இருக்க வேண்டும். இப்படி ஒரு நிமிடத்திற்கு இருக்க முயற்சிக்கவும், இந்த நிலையில் நீண்ட சுவாசத்தை எடுத்து விட வேண்டும்.
முதுகு கீழே படும்படி படுத்துக்கொள்ளவும். மூச்சை ஆழமாக உள்ளிழுத்து இரு கால்களையும் உயர்த்திக் கொண்டே செல்லவும். இரு கைகளையும் கால்களுக்கு இணையாக வைக்கவும். உங்கள் உடலை 45 டிகிரியில் வைத்திருங்கள். இப்படி செய்யும்போது முழங்கை மற்றும் முழங்காலை வளைக்கக்கூடாது. இப்படி சில நொடிகள் இருந்து பின்னர் ரிலாக்ஸ் செய்து படுத்துக்கொள்ளவும்.
தரையில் முதுகு படும்படி படுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கால் பாதத்தை தரையில் வைத்து முழங்கால்களை வளைக்கவும். உங்கள் குதிகால்களை உங்கள் பிட்டத்திற்கு நெருக்கமாக கொண்டு வாருங்கள். டெயில்போன் மற்றும் பிட்டங்களை மேல்நோக்கி உயர்த்தவும். மூச்சு விடவும். உங்கள் தொடைகள் மற்றும் உள் கால்களை இணையாக வைக்கவும். உங்கள் விரல்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நிலையில் உங்கள் இடுப்புக்கு கீழ் உங்கள் கைகளை வைக்கவும். அடுத்து தொடைகளை உயர்த்தவும். முழங்கால்களை உங்கள் குதிகால் மீது சீரமைத்து, உங்கள் மார்பை உங்கள் கன்னத்தை நோக்கி உயர்த்தவும். இந்த நிலையில் சில நொடிகள் இருக்கவும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.