அடாவடி கொலஸ்ட்ராலை அட்டகாசமாய் குறைக்கும் சூப்பர் இலைகள்

Cholesterol Control Tips: அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை இந்நாட்களில் பலரிடம் பரவலாக காணப்படும் பிரச்சனையாக உள்ளது. கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்கு மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை பெரிய காரணங்களாக உள்ளன. 

கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் மாரடைப்பு, டைப் 2 நீரிழிவு, பக்கவாதம் ஆகிய நோய்களும் நம்மை தாக்குகின்றன. உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதால் பல பக்கவிளைவுகள் எற்படுகின்றன. கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /8

கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை பொதுவாக வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையை மேம்படுத்தி குறைக்கலாம். இதில் பல இயற்கையான வழிகள் நமக்கு உதவும். அப்படி ஒரு இயற்கையான வழியை பற்றி இங்கெ பார்க்கலாம்.

2 /8

சில இலைகளை பயன்படுத்தி நாம் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க முடியும். தீவிர கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த இலைகளை கண்டிப்பாக தினமும் உட்கொள்ள வேண்டும். 

3 /8

முருங்கை இலையில் நல்ல அளவு வைட்டமின் ஏ, பி, சி, ஈ, இரும்புச்சத்து, துத்தநாகம், அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஆகியவை உள்ளன. இது இரத்த தமனிகளில் கொலஸ்ட்ரால் சேராமல் தடுக்கிறது. இது இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. 

4 /8

துளசி இலையை தினமும் வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம். இது இரத்தத்தில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை நீக்குகிறது. துளசி இலையில் தேநீர் தயாரித்தும் அருந்தலாம்.

5 /8

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கறிவேப்பிலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுவது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது சருமத்திற்கும் கூந்தலுக்கும் சிறந்தது. 

6 /8

தினமும் வெறும் வயிற்றில் வேப்ப இலைகளை மென்று சாப்பிட்டால், கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும். இது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது. மேலும் இதனால் நீரிழிவு நோயும் கட்டுக்குள் இருக்கும்.  

7 /8

நாவல் பழ இலைகள் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் வலிமையாக்குகிறது. 

8 /8

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.