Weight Loss Diet: இந்த 5 இயற்கை பானங்களை குடித்தால் போதும்! உடல் எடையை குறைக்கலாம்!

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உடற்ப்பயிற்சி செய்வதுடன் சில இயற்கையான பானங்களை எடுத்துக்கொள்வது சீக்கிரமாக உடல் எடையை இழக்க செய்கிறது.

 

1 /5

இந்திய உணவுகளில் அதிகளவில் சீரகம் பயன்படுத்தப்படுகிறது, குறைந்த கலோரிகள் கொண்ட இந்த சீராக தண்ணீர் செரிமானத்தை ஊக்குவித்து வயிற்று பகுதிகளில் கொழுப்புகள் படிவத்தை தடுக்கிறது.  இது பசியை கட்டுப்படுத்தி, எடை இழப்புக்கு உதவுகிறது.  

2 /5

உடல் எடையை குறைக்க நினைக்கும் பலர் அவர்களது டயட்டில் கிரீன் டீயை சேர்த்து கொள்கின்றனர், இது நமது வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து எடை இழப்புக்கு உதவுகிறது.  இந்த டீயில் இனிப்பு சேர்க்காமல் குடிப்பது கூடுதல் பலனை தரும்.  

3 /5

ஓமம் பொதுவாக நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இது செரிமான மண்டலத்தை சுறுசுறுப்பாக இயங்க செய்கிறது.  2 டீஸ்பூன் ஓமத்தை இரவில் நீரில் ஊறவைத்து மறுநாள் அதனை பருக உடல் எடை குறையும்.  

4 /5

வயிறு உப்புசம் மற்றும் செரிமானத்திற்கு சோம்பு பயன்படுத்தப்படுகிறது, முதல் நாள் இரவு சோம்பை நீரில் ஊறவைத்து மறுநாள் காலை அதனை கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.  இது பாடியை டீடாக்ஸ் செய்து உடல் எடையை குறைக்கிறது.  

5 /5

தண்ணீரை போன்றதொரு சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை, இது ஒட்டுமொத்த உடலுக்கு நன்மை தருகிறது.  உணவு உண்பதற்கு முன்னர் தண்ணீர் குடிப்பது உங்களை குறைவான உணவை உட்கொள்ள வைப்பதோடு தேவையற்ற கலோரிகளையும் எரிக்கிறது.