44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், முதன்முறையாக கடலுக்குள் செஸ் விளையாடிய அனுபவம் தங்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்ததாக விளையாட்டில் பங்கேற்ற வீரர்கள் தெரிவித்தனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெறும் என்று அறிவித்ததில் இருந்தே தம்பி எனப்படும் குதிரை வடிவிலான ஒரு பொம்மை சென்னை நகர் முழுவதும் முக்கிய பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
நேப்பியர் பாலம் உள்ளிட்ட சில மேம்பாலங்கள் சதுரங்க அட்டை போன்ற வடிவில் வண்ணம் பூசப்பட்டிருக்கிறது இதன் ஒரு பகுதியாக கடலுக்கு அடியில் தம்பி போன்று வேடம் அணிந்து செஸ் விளையாடி இருக்கிறார்கள் ஸ்கூபா டைவிங் வீரர்கள்.
புதுச்சேரி மற்றும் சென்னை பகுதிகளில் டெம்பிள் அட்வன்ச்சர் என்கிற ஆழ்கடல் பயிற்சி மையம் வைத்திருப்பவர் அரவிந்த் தருண்ஸ்ரீ. இவர் கடலில் பல்வேறு சாகசங்களையும், நிகழ்வுகளையும் நடத்தி வருபவர். ஆழ்கடலில் திருமணம், உடற்பயிற்சி, சைக்கிளின் ஆகியவை செய்து மக்களை கவர்ந்து வருகின்றார்.
சென்னை நீலாங்கரை கடற்பகுதியில் செஸ் ஒலிம்பியாட்டை வரவேற்கும் வகையில் தம்பி உடை அணிந்து, கடலுக்கு அடியில் 60 அடி ஆழத்தில் நம்ம சென்னை பேனருடன் , செஸ் விளையாடி வீரர்களுக்கு அரவிந்த் குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.
முதன்முறையாக கடலுக்குள் செஸ் விளையாடிய அனுபவம் தங்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்ததாக அரவிந்த் தெரிவித்தார்.