இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக கொலஸ்ட்ரால் என்பது பொதுவான பிரச்சனையாக ஆகிவிட்டது. இளைஞர்கள் கூட மாரடைப்பினால் இறக்கும் செய்தியை நாம் தினமும் கேட்கிறோம்.
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், இதய நோய்கள் வெளிப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவே கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம்.
LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க, சில காய்கறிகளை வழக்கமாக சேர்த்துக் கொள்வது பலன் அளிக்கும். இவை கொலஸ்ட்ரால் எரித்து மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை பெருமளவு குறைக்கிறது.
நார்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பெரிது அளவு உதவும். மேலும் இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி கொழுப்பை எரித்து உடல் பருமனை குறைக்கும்.
பாகற்காய் சாப்பிடுவது நீரிழிவு நோயை நிர்மூலமாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதற்கு கொலஸ்ட்ராலை இருக்கும் தன்மையும் உண்டு.. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் கொலஸ்ட்ராலை எரித்து இதய நோய் வராமல் பாதுகாக்கிறது.
வெண்டைக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள், கொலஸ்ட்ரால் எரிப்பதோடு, உடல் பருமனை கட்டுப்படுத்தவும் உதவும். இதனை வழக்கமாக சேர்த்துக் கொள்வதால், நீரிழிவு நோயும் கட்டுக்குள் இருக்கும்.
சுரைக்காயில் இருக்கும் சத்துக்கள் எண்ணில் அடங்காதவை. இது கொலஸ்ட்ராலை எரிக்கும் திறன் கொண்டது. உடல் பருமனை குறைக்கவும் சுரைக்காய் பெரிதும் உதவும்.
பூண்டில் உள்ள அலிசின் கொலஸ்ட்ரால இருப்பதோடு, ரத்த ஓட்டத்தை அதிகரித்து, இதய தவணைகளில் ஏற்படும் அடைப்பை நீக்குகிறது. எனவே இதனை கண்டிப்பாக உணவில் சேர்க்கவும்.
பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.