Uric Acid Home Remedies: யூரிக் அமிலம் என்பது உடலால் உருவாக்கப்படும் விஷம் போன்றது. இது அனைவரின் உடலிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் பருப்பு வகைகளை உட்கொள்ளலாமா என்ற கேள்வி பெரும்பாலும் மக்கள் மனதில் எழுகிறது. இந்த பதிவில், இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு பருப்பு வகைகள் எவ்வாறு நன்மை பயக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
யூரிக் அமிலம் இருக்கும்போது பருப்பு வகைகளை சாப்பிடலாமா என்ற கேள்வி பெரும்பாலும் பலருக்கு இருக்கின்றது. பருப்பு வகைகளை உட்கொள்வது நல்ல பலன்களை அளிக்கலாம்.
புரத அளவு: இது பருப்பு வகைகளின் புரத அளவை சார்ந்துள்ளது. அதிக புரதச்சத்து உள்ள பருப்பு வகைகளை யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
துவரம் பருப்பு மற்றும் பயத்தம் பருப்பில் அதிக அளவு புரதம் உள்ளது. ஆகையால் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே இவற்றை உட்கொள்ள வேண்டும்.
யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது கொள்ளு சாப்பிடக்கூடாது. இதனால் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
யூரிக் அமிலம் பிரச்சனை உள்ளவர்கள் ராஜ்மா உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.
ராஜ்மாவை அதிகம் உட்கொண்டால் யூரிக் அமிலத்தின் அறிகுறிகள் அதிகரிக்கக்கூடும். இதனால் பிரச்சனைகள் ஏற்படலாம்.
யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் உணவில் அதிக அளவு கொண்டைக்கடலையை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.