Shash mahapurush rajyog: சனி பெயர்ச்சியாகும் போது ஷஷ ராஜயோகம் உருவாகும். 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பொருளாதார பலன்கள், செழிப்பு மற்றும் பொன்னான நாட்கள் தொடங்கும்.
ஜோதிடத்தின்படி, ஒரு கிரகம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றுகிறது. சனி மிக மெதுவாக நகரும் கிரகம். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி கும்பத்திலும் வக்ர பெயர்ச்சி அடைந்து இருக்கிறார். நவம்பர் 4 வரை இந்த நிலையில் இருப்பார். சனியின் வக்ர நிவர்த்தி சிலருக்கு நல்ல பலனைத் தரும். இதன் போது ஷஷ ராஜயோகம் உருவாகும். இதனால் 3 ராசிக்காரர்களின் வாழ்வில் பொருளாதார பலன்களும், செழிப்பும், பொன்னான நாட்களும் தொடங்கும்.
ஷஷ ராஜயோகம்: சனி பகவான் ஒரு நபர்களின் கர்ம பலன்களுக்கு ஏற்ப நற்பலன்களை வழங்கக்கூடியவர். சனி பகவானின் வக்ர பெயர்ச்சியால், அனைத்து ராசிகளும் பாதிக்கும். சனி கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடையும் போது, ஷஷ ராஜ யோகம் உண்டாகும். இதனால், சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களை பெறுவார்கள்.
ஷஷ ராஜயோகம் தாக்கம்: பஞ்ச மகாபுருஷ் ராஜயோகத்தில், ஷஷ யோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதனால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். தொழில் வியாபாரத்தில் பதவி உயர்வும் அதிக பண வரவுமும் கிடைக்கும். எனவே எந்த ராசிகள் பெறும் அதிர்ஷ்ட ராசிகள் என்று பார்ப்போம்.
ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். ஷஷ ராஜயோகம் உங்கள் அதிர்ஷ்டத்தைத் திறக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் வலுவான முன்னேற்றம் ஏற்படும். அதன் மூலம் உயர் பதவி மற்றும் அதிக சம்பளம் பெறுவீர்கள். வியாபாரம் விரிவடையும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு ஷஷ ராஜ யோகம் பலன் தரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு வலுவாக இருக்கும். பொருள் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார ரீதியாகவும் நன்மைகள் உண்டாகும். சர்ச்சைக்குரிய விஷயத்தில் வெற்றி கிடைக்கும்.
கும்பம்: சனியின் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு சுபகாலம் தரும். கும்ப ராசிக்கு அதிபதியான சனி இந்த ராசியில் பெயரச்சி அடைகிறார். கும்ப ராசியில் சனியின் பெயர்ச்சி அடைந்ததால் இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். மூத்தவர்களுடன் உறவு வளரும். கூட்டுத் தொழிலில் வெற்றி பெறலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.