Weight Loss Tips: உடல் எடையை குறைக்க சுவையான வழி

Weight Loss: பலருக்கு குளிர்காலம் மிகவும் விருப்பமான பருவமாக உள்ளது. எனினும், குளிர்காலம் பலவித நோய்களையும் கொண்டு வருகிறது. நோய்களில் இருந்து விலகி இருக்க, நாம் சில ஹெவியான உணவுகளை உட்கொள்கிறோம். பொதுவாக, குளிர்காலத்தில், நம் மூதாதயர்கள், நெய் மற்றும் உலர் பழங்களால் செய்யப்பட்ட லட்டுகளை செய்து, நோய்களை தடுக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் அளித்தார்கள். ஆனால், இவை நம் எடையை அதிகரிக்கின்றன. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள்தான் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என சிலர் கருதுகிறார்கள். அது தவறு!! குளிர்காலத்தில், சில லைட்டான உணவுகளை உட்கொண்டும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

1 /4

ஸ்மூதிகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. குளிர்காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்டு ஸ்மூத்திகளை செய்து சாப்பிடலாம். இது ஊட்டச்சத்து நிறைந்தது.

2 /4

வாழைக்காயின் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. குளிர்காலத்தில் வாழைக்காய் சிப்ஸ் செய்து சாப்பிடலாம். 

3 /4

காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இது மட்டுமல்லாமல், அவற்றை சூப் செய்த பிறகு உட்கொண்டால், எந்த மருந்தையும் விட அவை அதிக நன்மை பயக்கும். காய்கறிகள் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. 

4 /4

அவல் மிகவும் லேசான உணவாகும். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமானால், தினமும் ஒரு வேளை வெறும் அவல் பண்டங்களை சாப்பிடலாம். இது சுவையாகவும், உடல் எடையை அதிகரிக்காமலும் இருக்கும்.