தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடுவது பல உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்தும். பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
குளிர்காலத்தில் உலர் பழங்களை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. பாதாம், முந்திரி மற்றும் அக்ரூட் பருப்புகள் தவிர, பேரீச்சம்பழம் குளிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பேரிச்சம் பழங்கள் உடலுக்கு கதகதப்பை கொடுக்கும் தன்மை கொண்டவை.
ஊட்டசத்துக்களின் களஞ்சியமான பேரீச்சம் பழத்தில், புரதம், துத்தநாகம், கார்போஹைட்ரேட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. குளிர்காலத்தில் தினமும் 4-5 பேரீச்சம் பழங்களை சாப்பிடுவதன் மூலம் உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதனை தொடர்ந்து உட்கொள்வதால் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.
பேரீச்சம் பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தினமும் 4 பேரீச்சம்பழங்களை உட்கொண்டால் போதும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம்.
பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் இரத்த சோகை குணமாகும். இரும்புச்சத்து இதில் ஏராளமாக உள்ளது, இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, உடலுக்கு ஆற்றலையும் தருகிறது.
பேரீச்சம்பழத்தின் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவாக உள்ளது. இதனை நீரிழிவு நோயாளிகள் கவலை இன்றி சாப்பிடலாம். இதில் உள்ள சத்துக்கள் சர்க்கரை நோய் பிரச்சனையில் மிகவும் நன்மை பயக்கும்.
பேரீச்சம்பழம் சாப்பிடுவது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இதில் ஏராளமான ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இது தொற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது. இதனை உட்கொள்வதன் மூலம் சளி மற்றும் இருமல் பிரச்சனையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.