அஜித்திற்கு வில்லனாகும் எஸ்ஜே சூர்யா! அதுவும் இந்த படத்தில்?

இயக்குனரான எஸ்ஜே சூர்யா தற்போது முழு நேர நடிகராக மாறி உள்ளார்.  விஜய், சிம்பு என முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ளார்.

 

1 /7

அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்க த்ரிஷா, ரெஜினா, ஆரவ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.  

2 /7

லைகா நிறுவனம் விடாமுயற்சி படத்தை தயாரிக்க, இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.  விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு  அஜர்பைஜானிலேயே தற்போது நடைபெற்று வருகிறது.    

3 /7

விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித் அவரது ரசிகரும் இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.  

4 /7

ஆதிக் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.    

5 /7

இந்த நிலையில் ஆதிக் இயக்கும் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   

6 /7

தற்போது எஸ்.ஜே.சூர்யா ஜிகர்தண்டா 2, இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் கமிட் ஆகி உள்ளார்.    

7 /7

ஏற்கனவே அஜித்க்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்று எஸ்ஜே சூர்யா கூறி இருந்த நிலையில், இந்த படத்தில் அவரது ஆசை நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.