அன்னாசிப்பழம்... ‘இந்த’ பிரச்சனை இருந்தால், அன்னாசி பழத்திற்கு நோ சொல்லுங்க..!!

Side Effects of Pineapple: பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களின் அன்னாசியும் ஒன்று.. இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட இந்த பழத்தை விடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

 

அன்னாசி பழத்தை சிலர், சாலட் ஆக அப்படியே சாப்பிடுவார்கள். சிலர் ஜூஸ் செய்து இருந்து வருந்துவார்கள். சிலர் உப்பு காரப்பொடி கலந்து வார்கள் சாப்பிடுவார்கள் எப்படி சாப்பிட்டாலும் சுவையை அள்ளிக் கொடுக்கும் பழம் அன்னாசிப்பழம்.

1 /8

அன்னாசி ஊட்டச்சத்துக்கள்: அன்னாசி பழத்தில் அச்சத்துக்கு குறைவில்லை. வைட்டமின் சி, க்னீசியம் நார்ச்சத்து இரும்பு சத்து என அனைத்து வகையான சத்துக்களும் இதில் கொட்டி கிடக்கின்றன.

2 /8

அன்னாசி பக்க விளைவுகள்:அன்னாசிப்பழம் அளவற்ற நன்மைகளை அள்ளிக் கொடுத்தாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அதை அன்னாசிப்பழத்தை அளவோடு தான் சாப்பிட வேண்டும். அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து கொள்ளலாம்.

3 /8

பற்கள் பாதிப்பு: அன்னாசிப்பழம் மிகவும் இனிப்பு சுவை கொண்டதோடு, அதிக அமிலத்தன்மை கொண்டது, இது பற்களுக்கு நல்லதல்ல. பல சொத்தை, பல வலி போன்ற பிரச்சனை இருப்பவர்கள் இந்த பழத்தை முடிந்தவரை குறைவாக சாப்பிடுங்கள். இல்லையெனில் பல் சொத்தை  பிரச்சனை அதிகமகாலாம்.

4 /8

அசிடிட்டி பிரச்சனை: அன்னாசிப்பழம் அமில தன்மை கொண்ட பழம் என்பதால் அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் உட்கொள்ள வேண்டும். அதே சமயம் இதில் நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால், அளவிற்கு அதிகமாக உட்கொள்வது வயிற்றுப்போக்கு,  வாந்தி போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

5 /8

இரத்த போக்கு அதிகரிக்கும் அபாயம்: அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் என்ற நொதி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. எனவே, மாத விடாய் காலத்தில், அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால்  இரத்தபோக்கு அதிகரிக்கலாம் என்கின்றனர்.

6 /8

ஒவ்வாமை பிரச்சனை:  அளவிற்கு அதிகமாக அன்னாசி பழம் சாப்பிடுவது, ஒவ்வாமை பிரச்சனை அதிகரிக்கும். தொண்டையில் அரிப்பு, உதடு வீக்கம் போன்ற பிரச்சனைகள் வரலாம். எனவே, ஒவ்வாமை உள்ளவர்கள் அன்னாசிப்பழத்தை அதிகம் உட்கொள்ளக்கூடாது.

7 /8

இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல்:  அன்னாசிப்பழம் இனிப்பு சுவை கொண்ட பழம் என்பதோடு, அதன் கிளைசெமிக் குறியீட்டு அளவும் மிக அதிகம்.  எனவே, இதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல.  இதனால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்கும்.

8 /8

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.