சனி பகவானின் அருளால் அக்டோபரில் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்

Saturn Transit in October: சில ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் மகிழ்ச்சி, செழிப்பு, மகிமை மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றைத் தரப் போகிறது. இந்த மாதம் சனி பகவான் தனது வக்ர நிலையிலிருந்து மாறி நேர் இயக்கத்துக்கு மாறவுள்ளார். நீதிக்கடவுளின் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் உருவாகும். இந்த காலகட்டத்தில் எதற்கும் தட்டுப்பாடு இருக்காது. வருமானம் அதிகரிப்பதோடு, வியாபாரத்திலும் வளர்ச்சி ஏற்படும்.

1 /5

மேஷ ராசிக்கு அக்டோபர் மாதம் சனி சஞ்சரிப்பதால் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் வேலையில் வெற்றி பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தின் நிலை நன்றாக இருக்கும்.

2 /5

கடக ராசிக்காரர்களுக்கு சனிபகவான் சஞ்சாரம் செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த மாதம் அவர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் நிதி நிலை வலுவாக இருக்கும். நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணம் இப்போது திரும்ப கிடைக்கும். 

3 /5

மகர ராசியில் சனிபகவான் சஞ்சரிப்பதால் துலாம் ராசிக்காரர்களும் பலன் அடைவார்கள். இந்த காலகட்டத்தில் நிதி நிலை சிறப்பாக இருக்கும். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

4 /5

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் பாதை மாற்றம் சுபமாக இருக்கும். இக்காலத்தில் வியாபாரத்தில் வளர்ச்சியும், வருமானமும் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் அமையும். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும்.

5 /5

மீன ராசிக்காரர்கள் சனியின் மாற்றம் மிகவும் சாதகமாக கருதப்படுகிறது. சனிபகவான் இந்த ராசிக்கு நன்மை செய்யும் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். மீன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் அபரிமிதமான நிதி நன்மைகளைப் பெறலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்பும் அமையும். வீடும் குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கும்.  (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)