சனி - புதன் இணைவு... 2025 இந்த ராசிகளுக்கு அமர்க்களமான ஆண்டாக இருக்கும்

இன்னும் சில நாட்களில், புத்தாண்டு 2025 தொடங்க உள்ளது. கிரகப் பெயர்ச்சியைப் பொறுத்தவரை அடுத்த ஆண்டு மிக முக்கியமானதாக இருக்கும். அடுத்த ஆண்டு சனி பெயர்ச்சி குரு பெயர்டச்சி உட்பட பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகளும் சேர்க்கைகளும் இருக்கும்.

 

சனி பெயர்ச்சி: 2025ம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி, நீதி கடவுள் என அழைக்கப்படும் சனி தேவன் கும்ப ராசியை விட்டு வெளியேறி மீன ராசிக்குள்  நுழைகிறார். சனி தேவன் மீன ராசியில் நுழைந்தவுடன், சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியின் பாதிப்புகள் நீங்கும். அதே நேரத்தில் சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி காலம் தொடங்கும்.

 

1 /8

நமது சூரிய குடும்பத்தில் மிக மெதுவாக நகரும் கிரகம் சனி கிரகம். அதே சமயம், மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாகவும் கருதப்படுகிறது. சனி கிரகத்தின் தாக்கத்தை அனைத்து ராசிகளிலும் காணலாம். சனி கிரகத்தின் பெயர்ச்சி, ஒருவரின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பார்கள் ஜோதிடர்கள்.

2 /8

புதன் கிரகம்: ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகம் புத்திசாலித்தனம், அறிவாற்றல், பேச்சாற்றல், செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகின்றது. ஒருவரது ஜாதகத்தில் புதன் வலுவான இடத்தில் இருந்தால் அந்த நபருக்கு வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அவர் எடுக்கும் அனைத்து முடிவுகளும் நல்ல வெற்றியையும் நற்பலன்களையும் அளிக்கின்றன.

3 /8

இரண்டு சக்திவாய்ந்த கிரகங்கள் சனி பகவான் மற்றும் புதன், 30 ஆண்டுகளுக்குப் பிறகு இணையப் போகின்றன. 2025 சனி பெயர்ச்சிக்கு முன்னதாக, ஜனவரி 19, 2025 அன்று இரவு 9.58 மணி முதல் சனியும் புதனும் 60 கோணத்தில் சந்திக்க இருப்பதால் திரி ஏகாதச யோகம் உண்டாகும்.

4 /8

அதிர்ஷ்ட ராசிகள்: கிரக சபெயர்ச்சிகள் மட்டுமல்லாது, அதனால் உருவாகும் கிரகங்களின் சேர்க்கைகளும், கிரக நிலைகளில் ஏற்படும் பிற மாற்றங்களும் ராசிகள் அனைத்தையும் பாதிக்கும் நிலையில், சனி - புதன் சேர்க்கை காரணமாக 3 ராசிக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்ட பலன்களைப் பெறப் போகிறார்கள் என்கின்றனர் ஜோதிடர்கள்.  

5 /8

மேஷம்:  சனி-புதன் இணைவதால் மேஷ ராசிக்காரர்கள் 2025ம் ஆண்டில் நினைத்தது அனைத்தையும் அடைவர்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் பலன் பெறலாம். நாள்பட்ட நோயிலிருந்து விடுபடலாம். குடும்பத்துடன் வெளியே செல்ல திட்டமிடுவீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும்.  

6 /8

மகரம்: சனி-புதன் இணைவதால் மகரம் ராசிக்காரர்கள் 2025ம் ஆண்டில் பல நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. தங்கள் வாழ்க்கையில் பல பெரிய வாய்ப்புகளைப் பெறலாம். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் உங்களுக்குச் சாதகமாகத் தீர்க்கப்படலாம், இதனால் நிம்மதி அடைவீர்கள். சனி தேவரின் ஆசிகள் உங்கள் மீது  எப்போதும் இருக்கும்.  

7 /8

கும்பம்: சனி-புதன் இணைவதால் கும்ப ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு பல நல்ல செய்திகளை கொண்டு வருகிறது. உங்கள் மேலதிகாரி உங்கள் வேலையில் மகிழ்ச்சியாக இருப்பார். புத்தாண்டில் உங்களுக்கு பதவி உயர்வு வழங்கலாம். பழைய முதலீட்டிலிருந்து எதிர்பாராத நிதி ஆதாயம் இருக்கலாம். இது குடும்பத்தில் செழிப்பைக் கொண்டுவரும்.

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.