கிரிக்கெட்டரை மட்டுமல்ல அவரது அப்பாவையும் அவுட்டாக்கிய பெளலர்கள் பட்டியல்

Wickets Of Father-Son Duo: டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் எடுத்து பெயர் பெறும் பவுலர்களில் சிலர் இன்னும் ஸ்பெஷலான சாதனைகளை செய்துள்ளனர். ஆச்சரியமளிக்கும் விக்கெட்டர்கள்... 

 

தந்தை மற்றும் மகன் இருவரின் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் அரிய பட்டியல் இது. இந்த உயரடுக்கு பட்டியலில் புதிதாக இணைந்தவர் ஆர் அஸ்வின்.

 

1 /7

ஆர் அஷ்வின் டேகனரைன் சந்தர்பாலை வெளியேற்றிய பிறகு, டெஸ்டில் தந்தையையும் மகனையும் வெளியேற்றிய பந்து வீச்சாளர்களின் பட்டியல்

2 /7

டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்தை மற்றும் மகன் இருவரின் விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்து பந்துவீச்சாளர்களின் அரிய பட்டியல்.  

3 /7

இந்தப் பட்டியலில் இந்தியாவின் தலைசிறந்த ஆஃப் ஸ்பின்னர் ஆர் அஸ்வின் இடம் பிடித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் முதல் டெஸ்டில் மகனை அவுட்டாக்கிய அஸ்வின், 2011 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற டெபோட்டியில் போது டேகனரைனின் தந்தை ஷிவ்நரைன் சந்தர்பாலை அவுட்டாக்கினார்.

4 /7

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்ரவுண்டருமான இயான் போத்தம், பியூசிலாந்தின் லான்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ர்ன்ஸ் என தந்தை மற்றும் மகனின் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

5 /7

பாகிஸ்தான் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம், லான்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ர்ன்ஸை வெளியேற்றி, தந்தை-மகன் இரட்டையரை அவுட்டாக்கியுள்ளார்.

6 /7

சைமன் ஹார்மர் தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர், சிவனாரைன் சந்தர்பால் மற்றும் தாகெனரைன் சந்தர்பால் ஆகியோரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

7 /7

ஆஸ்திரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷிவ்நரைன் சந்தர்பால் மற்றும் அவரது மகன் தகனரைன் சந்தர்பால் ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.