இளைஞர்கள் கூட மாரடைப்பினால் இறக்கும் சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதய நாளங்களில் சில வகையான அடைப்பு காரணமாக, இதயத்திற்கு போதுமான இரத்தம் கிடைக்காதபோது, மாரடைப்பு ஏற்படலாம்.
மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கக்கூடிய பல காரணிகள் உள்ளன. அவற்றைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம். அந்த ஆபத்து காரணிகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
மாரடைப்பு இன்றைக்கு மிகவும் சாதரணமாகிவிட்டது. இளைஞர்கள் கூட மாரடைப்பினால் இறக்கும் சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், மாரடைப்பை ஏற்படுத்தும் முக்கிய காரணகிகளை அறிந்து கொள்வது பல உயிர்களை காப்பாற்றும்.
கொலஸ்ட்ரால் அதிகரிப்பது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் இதை கட்டுப்படுத்தலாம். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.
கட்டுப்பாடற்ற நீரிழிவு உங்கள் இதயத்தை சேதப்படுத்தும். 65 வயதிற்கு மேல், சர்க்கரை நோயினால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் 68% அதிகமாக உள்ளது.
உடல் பருமன் அதிகரிப்பதால் கொலஸ்ட்ரால், பிபி மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம். ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் உடல் கொழுப்பை குறைக்கலாம். அதிகரிப்பதால் கொலஸ்ட்ரால், பிபி மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம். ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் உடல் கொழுப்பை குறைக்கலாம்.
இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது, உங்கள் இதயம் கடினமாக உழைக்க வேண்டும். இவ்வாறு இதயத் தசைகள் கடினமாவது மாரடைப்புக்கு வழிவகுக்கும்.
மாரடைப்பால் ஏற்படும் ஒவ்வொரு ஐந்தில் ஒருவருக்கு புகைபிடித்தல் காரணமாகும். நீங்கள் சிகரெட் புகைத்தால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இரண்டு முதல் நான்கு மடங்கு அதிகரிக்கும்.