நீரிழிவு நோய், அதாவது சர்க்கரை நோய் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு மரபணு நோயாக இருந்தது. ஆனால் இன்று மக்களின் வாழ்க்கை முறை காரணமாக இது ஒரு பொதுவான நோயாக மாறியுள்ளது. பெரியவர்களுடன், குழந்தைகளும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீரிழிவு நோயில் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் தங்களது இரத்த சர்க்கரை அளவை தவறாமல் பரிசோதிக்க வேண்டும். இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், இதய நோய், கண் நோய், சிறுநீரக நோய் போன்றவை உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அதில், வெங்காயம் (Onion) எவ்வாறு இரத்ததில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
வெங்காயத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த இரண்டு கூறுகளும் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்கின்றன. சில நேரங்களில் நீரிழிவு நோயின் அறிகுறிகள் உடனே தென்படுவதில்லை. இத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு நபரும் 30 வயதை எட்டியவுடன் அவரது உடல்நிலையை தொடர்ந்து பரிசோதித்து கொள்ள வேண்டும்.
வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடலில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்கிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு செரிமான திறன் குறைவாக உள்ளது. இந்த வகையில், பச்சை வெங்காயத்தை உட்கொள்வது செரிமானத்தை அதிகரித்து, அதன் மூலம் உடலின் வளர்சிதை மாற்றத்தை (metabolism) மேம்படுத்துகிறது. மெடபாலிஸம் உடலில் நல்ல நிலையில் இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
நீரிழிவு நோயாளிகள் குறைந்த கார்போஹைட்ரேட் அதாவது மாவு சத்து உள்ள உணவை உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். வெங்காயத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மிகக் குறைவு.
குறைவான கிளைசெமிக் குறியீட்டைக் (Glycemic Index) கொண்ட எந்த உணவும் நீரிழிவு நோயாளிக்கு நன்மை பயக்கும். கிளைசெமிக் குறியீடு, குறிப்பிட்ட உணவு, இரத்தத்தில் சர்க்கரை அளவை எந்த அளவிற்கு கட்டுபடுத்தும் என்பதை அதில் உள்ள காபோஹைட்ரே அளவை வைத்து நிர்ணயிக்கப்படும் குறியீடாகும். வெங்காயத்தின் Glycemic Index 10 ஆக உள்ளது. எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு வெங்காயம் மிகவும் சிறந்தது மருத்துவர்கள் கருதுகின்றனர்.