இந்திய வங்கி ஊழியர்கள் சார்பில் தேவை இருந்தால் மட்டுமே வங்கிகளுக்கு வரவும் என்று வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை வைத்துள்ளது. அதன்படி எஸ்பிஐ வங்கி ஒரு சில முக்கிய பணிகளுக்கு மட்டும் வாடிக்கையாளர்களை வங்கியில் அனுமதிக்கும் அவை.,
இந்தியாவில் கொரோனா தொற்று பெரும் அளவில் அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவின் இந்த 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா காரணமாக நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த தொற்றின் காரணமாக பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சார்பில் தேவை இருந்தால் மட்டுமே வங்கிகளுக்கு வரவும் என்று வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை வைத்துள்ளது. அதன்படி எஸ்பிஐ வங்கி ஒரு சில முக்கிய பணிகளுக்கு மட்டும் வாடிக்கையாளர்களை வங்கியில் அனுமதிக்கும் அவை.,
நேர மாற்றம் எஸ்பிஐ வங்கி 10 மணி முதல் 2 மணி வரை இயங்கும். முன்பு நடைமுறையில் இருந்ததைப் போன்றே அனைத்து வங்கிசார் நிர்வாகப் பணிகளும் 50% ஊழியர்களைக் கொண்டு இயங்கும்.
மாஸ்க் அணிவது வங்கிகளுக்கு செல்கிறீர்கள் என்றால் நிச்சயமாக மாஸ்க் அணிய வேண்டும். முகக்கவசம் இல்லாத வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்த சேவைகளுக்கு மட்டுமே வங்கில் அனுமதி பணம் எடுத்தல் அல்லது வங்கிக் கணக்கில் செலுத்துதல், காசோலை தொடர்பான வேலைகள், வேலை தொடர்பான டி.டி./ நெஃப்ட்/ஆர்.ஜி.டி.எஸ் மற்றும் அரசு செலான் போன்றவற்றிற்காக மட்டுமே வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை நேரில் பயன்படுத்த இயலும். மற்ற அனைத்துவிதமான சேவைகளுக்கும் எஸ்பிஐ நெட் பேங்கிங் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.