தொப்பை கொழுப்பை எரிக்கும் ராகி... சில சுவையான ரெஸிபிகள் இதோ

Ragi Recipies For Weight Loss: சிறுதானியங்களில் ராகி என்று அழைக்கப்படும் கேழ்வரகு, தேவர்களின் உணவாக கருதப்படுகிறது. கேழ்வரகில் இருக்கும் மிதியோனை என்னும் அமினோ அமிலம், லெசித்தினுடன் இணைந்து, அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது.

ராகி நார்ச்சத்து நிறைந்த தானியம் அதோடு குளூட்டன் இல்லாத உணவு. நார்ச்சத்து அதிக உள்ள உணவை உட்கொள்வதால் உட்கொள்வதால் வயிறு நிறைந்த உணர்வு நீண்ட நேரம் நீடிக்கும். இதன் காரணமாக, உங்களுக்கு அடிக்கடி பசி ஏற்படாது. இதனால் அதிகம் சாப்பிடுவதும் தவிர்க்கப்படும்.

1 /8

ராகி என்னும் கேழ்வரகு: குளூட்டன் அல்லாத சிறந்த உணவான கேழ்வரகு என்னும் ராகியில் கொழுப்பை கரைக்கும் ஆற்றலுடன், முதுமையை தடுக்கும் சக்தியையும் கொண்ட அமினோ அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளதால் உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. மேலும், ராகி புரதம் நிறைந்தது. புரதம் தசையை வலுப்படுத்தி, உடலில் அதிக அளவிலான கொழுப்பு எரிக்க உதவுகிறது.

2 /8

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், ராகி ரொட்டி, ராகி தோசை, ராகி இட்லி போன்றவற்றை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவது சிறந்த பலனைக் கொடுக்கும். எடை இழப்புக்கு ராகி எந்த வகையில் பலன் அளிக்கிறது. அதை சாப்பிடுவதற்கான சரியான, சுவையான வழி என்ன என்பதை அறிந்து கொள்வோம்.

3 /8

ராகி இட்லி: வழக்கமாக இட்லி மாவு அரைக்க நாம் பயன்படுத்தும் அரிசியின் அளவைக் குறைத்துக் கொண்டு, அதற்கு பதிலாக ராகியை சேர்த்து இட்லி செய்யலாம். சுவை நிறைந்த இந்த இட்லியை சாம்பார் அல்லது உங்களுக்கு பிடித்த சட்னியுடன் சாப்பிடுவது சிறந்த வெயிட் லாஸ் டயட் ஆக இருக்கும்.

4 /8

ராகி தோசை: இட்லியை போலவே, தோசைக்கான மாவு அரைக்கும் போது, அதில் அரிசியின் அளவைக் குறைத்துக் கொண்டு அதற்கு பதிலாக ராகி என்னும் கேழ்வரகை சேர்த்து அரைத்து தோசை செய்யலாம். இந்த தோசையை காய்கறிகள் சேர்த்த சாம்பார் அல்லது உங்களுக்கு பிடித்த சட்னியுடன் சாப்பிடுவது சிறந்த வெயிட் லாஸ் டயட் ஆக இருக்கும்.

5 /8

ராகி உப்புமா அல்லது புட்டு: ராகி  கனிமங்களின் ஆற்றல் மையமாகும்.  ராகி மாவை தண்ணிர் தெளித்து பிசறி வைத்துக் கொண்டு, சிறிது நேரம் கழித்து, இதனையும் தேங்காயையும் புட்டுக் குழலில் அடைத்து வேக விடலாம். தேங்காய்ப் பாலில் ராகி மாவை பிசைந்து புட்டு போல் உப்புமா போல் தயாரிக்கலாம். இந்த ராகி உப்புமா அல்லது புட்டு உடல் எடையைக் குறைக்க உதவும் மிக சிறந்த உணவாகும்.

6 /8

ராகி  சப்பாத்தி: சப்பாத்தி மாவில்,  ராகி மாவைசேர்க்கவும். இதில் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை சேர்க்கவும். இந்த அற்புதமான சப்பாத்தி மாவில் தயாரிக்கப்படும் ரொட்டி வெளியில் மொறுகலாகவும், உட்புறம் மென்மையாகவும் இருக்கும். இந்த அருமையான ராகி சப்பாத்தியை ஒரு கிண்ணம் தயிருடன் சேர்த்து உண்டு மகிழலாம்.

7 /8

ராகி கஞ்சி: ராகி கஞ்சி ஆரோக்கியமானது மட்டுமல்ல, சுவையானதும் கூட. ராகி மாவை சிறிது தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து, பின் அதில் வெங்காயம், கொத்த்மல்லி தயிர் சேர்த்து அருந்தலாம். அல்லது அதில் பால், வாழைப்பழம், தேன் மற்றும் நட்ஸ் ஆகியவற்றைச் சேர்க்கவும். சுவையான சத்தான இந்த பானத்தை குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறூப்பேற்காது.  

Next Gallery