Latest Photos Ajith Kumar Daughter Anoushka Kumar : நடிகர் அஜித்குமாருக்கும் ஷாலினிக்கும் அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் சமீபத்திய போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Latest Photos Ajith Kumar Daughter Anoushka Kumar : தமிழ் திரையுலகில் டாப் நடிகராக வலம் வருபவர், நடிகர் அஜித் குமார். நடிகை ஷாலினியை 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு இவர் நடிக்கவே இல்லை. இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர். வெளி நிகழ்ச்சிகளுக்கு அஜித்குமார் பெரும்பாலும் வராததால், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். அப்படி, சமீபத்தில் காளிதாஸ் ஜெயராமின் திருமணம் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர், அஜித்குமார். இவர், 2000ஆம் ஆண்டு நடிகை ஷாலினியை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர்.
நடிக்கும் போது தவிர, பிற நேரங்களில் கேமராவை விட்டு விலகியிருக்கும் அஜித்குமார், தனக்கு கிடைக்கும் நேரங்களை குடும்பத்தினருடன் செலவிடுவதிலும் பைக் ரைடிங் செல்வதிலும் செலவிடுவார். அஜித், அடிக்கடி தனது குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதும் உண்டு. தனது குடும்பத்தினரை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் இவர், தன்னை கேட்காமல் யாரேனும் தன்னை குடும்பத்துடன் வீடியோ எடுத்தாலும் அதை அப்படியே வாங்கி டெலிட் செய்து விடுவார்.
அஜித்தான் பெரும்பாலும் வெளி நிகழ்ச்சிகளுக்கு வர மாட்டாரே தவிர, அவரது குடும்பத்தினர் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வர். அப்படி, சமீபத்தில் அஜித்தின் மனைவி ஷாலினி தனது இரு குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக் உடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த புகைப்படங்களில் அனோஷ்கா பார்ப்பதற்கு அப்படியே அஜித் போல இருப்பதாக கூறப்படுகிறது. இந்த போட்டோவில் அனோஷ்கா தனது தாய் ஷாலினியுடன் போஸ் கொடுக்கிறார்.
நடிகர் காளிதாஸ் ஜெயராமிற்கும், முன்னாள் மிஸ் தமிழ்நாடு பட்டம் வாங்கிய மாடல் தாரிணிக்கும் சமீபத்தில் திருமணம் நடைப்பெற்றது. இதில் எடுக்கப்பட்ட அனோஷ்காவின் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
அனோஷ்காவிற்கு தற்போது 16 வயதாகிறது. இவர், தற்போது பள்ளியில் படித்து வருவதாக கூறப்படுகிறது.
அனோஷ்காவின் இந்த சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.