Tomato Side Effects: தக்காளி சமீப காலங்களில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. அதன் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், தக்காளி நம் சமையலின் மிக முக்கிய அங்கமாகவும் உள்ளது.
பல்வேறு உணவு வகைகளில் தக்காளி பயன்படுத்தப்படுகின்றது. தக்காளியில் நமது உடல் அரோக்கியத்திற்கு தேவையான பல நல்ல பண்புகள் உள்ளன. எனினும், இதனால் சில பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. சில உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக தக்காளியை சாப்பிடக்கூடாது. அதை பற்றி விரிவாக இந்த பதிவில் காணலாம்.
5 உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் தக்காளியை சாப்பிடக்கூடாது என ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் தக்காளியை உட்கொண்டால் இவர்களது பிரச்சனை இன்னும் அதிகரிக்கக்கூடும்.
கீல்வாதம்: கீல்வாதம் உள்ளவர்கள் தக்காளியை சாப்பிட வேண்டாம் என்று ஆயுர்வேத நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். வாயு மற்றும் அசிடிட்டி தொந்தரவு இருந்தாலும் தக்காளியை சாப்பிடக் கூடாது என்கிறார்கள். அதுவும் தவறுதலாக கூட தக்காளியை பச்சையாக சாப்பிடக்கூடாது.
சிறுநீரக கல்: ஒருவருக்கு சிறுநீரக கல் இருந்தால், தவறுதலாக கூட தக்காளியை சாப்பிடக்கூடாது. ஏனெனில் தக்காளியில் கால்சியம் ஆக்சலேட் உள்ளது. சிறுநீரகத்தில் கற்களை உருவாக்க இது செயல்படுகிறது. தக்காளி விதைகள் வயிற்றில் செரிக்கப்படாமல் சிறுநீரகத்தில் உறைந்துவிடும், இதன் காரணமாக கற்கள் பிரச்சனை தொந்தரவு செய்யலாம்.
மாதவிடாய்: மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு உள்ள பெண்கள் தக்காளியை தவிர்க்க வேண்டும். இதனால் உடலில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இரத்தப்போக்கு இன்னும் அதிகமாகலாம்.
வாயு-அமிலத்தன்மை: ஆயுர்வேதத்தின் படி, வாயு-அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களும் தக்காளி சாப்பிடக்கூடாது. இதை உட்கொள்வதால், உடலின் செரிமான நெருப்பு குறைகிறது மற்றும் ஜீரண சக்தி மோசமாக பாதிக்கப்படுகின்றது. இதனால் அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
தோல் ஒவ்வாமை: சரும அலர்ஜி அல்லது உடலில் அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால், தக்காளியை தொடவே கூடாது. இது ஆபத்தாக முடியும். தக்காளி, உருளைக்கிழங்கு, பிரிஞ்சி, சிட்ரஸ் பழங்கள் மற்றும் காரமான பொருட்களை சாப்பிடுவது உடலில் பித்த தோஷத்தை அதிகரிக்கிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.