தினேஷ் கார்த்திக் முதல் அருண் லால் வரை சில இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒரு தடவைக்கு மேல் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அருண் லால் சில கருது வேறுபாடுகள் காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் தனது முதல் மனைவியை பிரிந்தார். தற்போது 66 வயதாகும் இவர் 38 வயதான புல் புல் சாஹா என்பவரை வரும் மே மாதம் 2ம் தேதி கொல்கத்தாவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். மேலும் அருணின் முதல் மனைவி நோய்வாய் பட்டிருப்பதாகவும், இவர்களது திருமணம் முடிந்த பின்னர் இருவரும் சேர்ந்து அவரை கவனித்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் இரண்டு தடவை திருமணம் செய்துள்ளார். முதலாவதாக யுவராஜின் தாயார் ஷப்னம் சிங்கை திருமணம் செய்துகொண்டார், பின்னர் இரண்டாவதாக சத்வீர் கவுரை திருமணம் செய்துகொண்டார். தற்போது யுவராஜ் அவரது தாயுடனும், அவரது தந்தை இரண்டாவது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவஹல் ஸ்ரீநாத் ஜோத்ஸ்னாவை திருமணம் செய்துகொண்டார். பின்னர் சில காரணங்களால் விவாகரத்து செய்துகொண்டனர், அதன்பின்னர் பத்திரிக்கையாளர் மாதவி பத்ராவளியை ஸ்ரீநாத் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் 2007-ல் அவரது தோழி நிகிதா வஞ்சாராவை திருமணம் செய்துகொண்டார். நிகிதா மற்றொரு கிரிக்கெட் வீர்ர் முரளி விஜயை காதலித்ததால் அவரை விவாகரத்து செய்தார். அதன்பின்னர் நிகிதா முரளியை திருமணம் செய்துகொள்ள, 2015ல் தினேஷ் கார்த்திக் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்களை திருமணம் செய்துகொண்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான முகமது அசாருதீனுக்கு இரண்டு முறை திருமணம் நடைபெற்று விவகாரத்தானது. 1987ல் நவ்ரீனை திருமணம் செய்துகொண்டார் இவர்களது விவகாரத்திற்கு பிறகு 1996ம் ஆண்டு பாலிவுட் நடிகை சங்கீத பிஜ்லானியை திருமணம் செய்தார், ஆனால் 2010ல் இவர்களுக்குள் விவாகரத்து ஆனது.