வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

காலக்கெடுவிற்குப் பிறகு வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தால் 234A பிரிவின் கீழ் மற்றும் வருமான வரி 234F பிரிவின் கீழ் அபராதத்துடன் வரி செலுத்த வேண்டும்.

 

1 /5

2022-23ம் ஆண்டிற்கான வருமான வரி அறிக்கையை இன்னும் தாக்கல் செய்யாதவர்கள் உடனடியாக அதை செய்யவேண்டும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும்.  

2 /5

ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான தேதியை ஜூலை 31ம் தேதிக்கு பிறகு நீட்டிக்க அரசு தற்போது தயாராக இல்லை, மேலும் இதைப்பற்றி அரசு பரிசீலனை செய்யவும் இல்லை என்று ஏற்கனவே வருவாய்த் துறை செயலர் கூறியதை மக்கள் நினைவில் கொள்ளவேண்டும்.  

3 /5

காலக்கெடு முடிவதற்கு முன்னர் படிவம்-16ஐ நிரப்பிவிடுங்கள், இல்லாவிடில் நீங்கள் அபராதம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.  இது தவிர, அதிக வரி செலுத்துவோர் வருமான வரி ஈ-ஃபைலிங் இணையதளத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்யும்போது சுமை அதிகரிக்கும்.    

4 /5

2021-22 நிதியாண்டு மற்றும் 2022-23 ஆம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கை தாமதக் கட்டணம் இல்லாமல் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2022 என்பது குறிப்பிடத்தக்கது.   

5 /5

காலக்கெடுவிற்குப் பிறகு நீங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தால் 234A பிரிவின் கீழ் மற்றும் வருமான வரி 234F பிரிவின் கீழ் அபராதத்துடன் வரி மீதான வட்டியை நீங்கள் செலுத்த வேண்டியதிருக்கும்.