Weight Loss Tips: உடல் பருமனை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். பல மணி நேரங்களை ஜிம்மில் செலவிடும் நபர்களும் உண்டு. எனினும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.
Garlic For Weight Loss: அப்படி ஒரு வீட்டு வைத்தியம்தான் பூண்டு. பூண்டு உணவில் சுவையை சேர்ப்பதைத் தவிர, நமது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. பொதுவாக மக்கள் பூண்டை உணவுல் உட்கொள்கிறார்கள். ஆனால் பூண்டை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும்.
பூண்டு உணவுக்கு வித்தியாசமான சுவையை தருகிறது. பூண்டு இல்லாமல் பல உணவு வகைகளில் சுவையே தெரியாது என்பது உண்மை. இது உணவுக்கு ஒரு தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்தை சேர்க்கிறது.
பூண்டு உணவில் சுவையை சேர்ப்பதைத் தவிர, நமது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. பூண்டை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும்.
பல வித ஆரோக்கிய நன்மைகளுடன் எடையைக் குறைப்பதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேகவைத்த அல்லது லேசாக வதக்கிய பூண்டை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதை எப்படி உட்கொள்வது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை கட்டுப்படுத்தலாம், தொப்பை கொழுப்பையும் குறைக்கலாம். இதில் உள்ள கூறுகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றன. இது கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது
பூண்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. சமைத்த பூண்டுப் பற்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலமும் பல நோய்களுக்கு ஆளாவதைத் தவிர்க்கலாம்.
பூண்டு உட்கொள்வது உடலில் சேரும் அழுக்குகளை அகற்றுவதற்கும் நன்மை பயக்கும். சமைத்த பூண்டை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடலில் சேரும் நச்சுக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றலாம்.
பூண்டு பற்களை உட்கொள்வது ஆரோக்கியமான செரிமானத்தை பராமரிக்க நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. பூண்டு பற்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல், வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.