தினசரி எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? மருத்துவர்கள் கூறுவது என்ன?

தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், நீரிழப்பு, இரத்த அழுத்தம், தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

 

1 /5

உடல் சரியாக செயல்பட தண்ணீர் அவசியாமன ஒன்று. தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கும், ஊட்டச்சத்துக்களை பெறுவதற்கும் பாக்டீரியாவை வெளியேற்றுவதற்கும் உதவுகிறது.  

2 /5

மேலும் செரிமானத்திற்கு, மலச்சிக்கலைத் தடுக்க, இரத்த அழுத்தத்தை இயல்பாக்க, உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்த, திசுக்களைப் பாதுகாப்பது என உடலுக்கு முக்கியமான ஒன்றாக உள்ளது.   

3 /5

ஆண்கள் சராசரியாக தினமும் 4 லிட்டரும், பெண்கள் தினசரி 3 லிட்டரும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.  மொத்தமாக தண்ணீர் மட்டும் குடிக்க வேண்டாம். இதில் ஜூஸ், டீ, காபி போன்றவைகளும் அடங்கும்.  

4 /5

மேலும், ஆரோக்கியமான உடல் செயல்பாட்டை பராமரிக்க ஒவ்வொரு நாளும் 2 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு அதிகமாக வியர்க்கும் என்றால் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.  

5 /5

உங்களுக்கு சிறுநீரகம் அல்லது இதயப் பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரின் அறிவுரைப்படி தண்ணீர் குடிக்க வேண்டும்.  நீங்கள் தினசரி எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.