Low CIBIL Score And Loans : கிரெடிட் ஸ்கோர் சிறப்பாக இல்லாவிட்டாலும் கடன் உடனடியாக கிடைக்க வேண்டுமா? இந்த கட்டுரையை படிங்க..
தனிநபர்களுக்கு கடன் தேவைப்படும்போது, வங்கிகள் உட்பட நிதி நிறுவனங்கள், நல்ல சிபில் ஸ்கோர் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. சிபில் ஸ்கோர் அதிகமாக இருந்தால் பிணையம் இல்லாமலும் கடன் வாங்கலாம். ஆனால், சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால் தனிநபர் கடன் பெறுவது எப்படி?
கடன் வாங்குபவர்கள் அதை திருப்பி செலுத்தும் தகுதியுடன் இருக்கிறார்களா என்பதை பார்க்க, கடனுக்கு உத்தரவாதம் கேட்பது வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களின் வழக்கம். ஆனால், டிஜிட்டல் யுகத்தில் தனிநபர் உத்தரவாதம் ஒரு புறம் இருந்தாலும், கடன் வாங்க விண்ணப்பிப்பவரின் சிபில் ஸ்கோர் அவரது நிதி நிலையை காட்டிவிடும்
சிபில் ஸ்கோர் மக்களிடையே இன்னும் குழப்பம் உள்ளது. சிபில் ஸ்கோர் எனப்படும் உங்கள் கடன் தகுதி நிலை மதிப்பெண்ணைப் பற்றி தெளிவாக புரிந்துக் கொள்ளுங்கள்
குறைவான சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கு கடனே கிடைக்காது என்று எந்த விதியும் இல்லை.
சிபில் ஸ்கோர் குறைவாக உள்ளவர்களுக்கு கடன் வழங்கும் சில வங்கிகள் இருக்கின்றன. கடனுக்கான வட்டி விகிதம் மாறுபடலாம்
ஒரு தனிநபரின் கடன் வாங்கும் செயல்முறை, அவருக்கு எவ்வளவு கடன் உள்ளது, வாங்கிய கடனை திருப்பி செலுத்துவது என்பதை காட்டுவது தான் சிபில் ஸ்கோர். கிரெடிட் கார்டு பில்கள் மற்றும் கடனை திருப்பிச் செலுத்துவது தான் சிபில் ஸ்கோரை பாதிக்கிறது
இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது