பயணிகளின் கனிவான கவனத்திற்கு! ரயிலில் பயணிப்பவர்கள் எப்போது தூங்கக்கூடாது? தெரியுமா?

Train Travel And Middle Birth : ரயில் பயணம் என்பது அனைவருக்கும் பிடித்தமானதாக இருப்பதற்கு காரணங்கள் பல இருந்தாலும், அவற்றில் ஒன்று நீண்ட பயணம், புதியவர்கள் அறிமுகம், வெவ்வேறுவிதமான மனிதர்களை சந்திப்பது ஆகியவை முக்கியமானவை. 

நீண்ட ரயில் பயணங்களில் உறக்கம் என்பதும் முக்கியமான விஷயமாக இருக்கிறது. குழந்தைகள் மற்றும் பல பெரியவர்களுக்கும் கூட ரயில் பயணங்களில் பிடித்தமானது அதில் உள்ள படுக்கையில் உறங்குவது என்றால் அது மிகையான விஷயம் அல்ல...

1 /7

ரயில் பயணத்தின்போது, மிடில் பெர்த்தில் தூங்குவது தொடர்பான ரயில்வே விதிகள் பற்றிய தகவல் தெரியுமா? பயணத்திற்கு முன் உடனடியாக சரிபார்க்கவும்

2 /7

ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு... ரயில் பயணத்தின்போது எப்போது தூங்கலாம், எப்போது தூங்கக்கூடாது என்பது தொடர்பான விதிமுறைகளை தெரிந்துக் கொள்வோம்

3 /7

இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களின் படி, இரவு 10 மணிக்குப் பிறகு மட்டுமே மிடில் பெர்த்தை திறக்க முடியும். இரவு பத்து முதல் அடுத்த நாள் காலை 6 மணிக்கு வரை தான் அதை விரித்து தூங்க வேண்டும்

4 /7

TTE  ரயில் டிக்கெட் பரிசோதகர் இரவு 10:00 மணிக்குப் பிறகும், காலை 6:00 மணிக்கு முன்பும் டிக்கெட் சரிபார்க்க முடியாது. இந்த விதியை பின்பற்றவில்லை என்றால், TTE மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

5 /7

பகலில் தூக்கம் வந்தால், உட்கார்ந்து கொண்டே தூங்க வேண்டும். இருந்தாலும்,  நோயாளிகள், ஊனமுற்றோர் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் தூங்க விரும்பினால், அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். பயணிகளுக்கு இடையில் எந்தவித பிரச்சனையும் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

6 /7

இந்த விதி அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாக,  பயணிகள் தூங்கும் நேரம் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை என இருந்தது

7 /7

முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் உள்ள அனைவருக்கும் இந்த விதி பொருந்தும்.