நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க கண்டிப்பாக உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
செயற்கையாக இனிப்பு சுவையூட்டப்பட்ட பானங்களில் ப்ரக்ட்டோஸ் மற்றும் அதிக கலோரிகள் நிறைந்துள்ளது. இது டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு கண்டிப்பாக ஏற்றது கிடையாது. மேலும் நீரிழிவு நோயாளிகள் பழச்சாறுகளுக்கு பதிலாக பழங்களை சாப்பிடுவது நல்லது.
உலர் பழங்கள் உடலுக்கு நல்லது என்றாலும் இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது, உலர் பழங்களில் நீர்சத்துக்கள் இல்லை. எனவே நீரிழிவு நோயாளிகள் உலர் பழங்களுக்கு பதிலாக குறைவான இனிப்பு சுவையுள்ள பழங்களை சாப்பிடலாம்.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள் பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்ட மாவு கலந்து செய்யப்படுகிறது. இந்த மாவு உங்களுக்கு சில ஊட்டச்சத்துக்களை வழங்கினாலும் இதில் அதிகளவு கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால் இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
க்ரீம், ஃபுல் ஃபேட் யோகர்ட், ஐஸ்க்ரீம், க்ரீம் சீஸ் போன்ற முழு கொழுப்புள்ள பால் பொருட்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது. இதனை சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பில் பாதிப்புகள் ஏற்படும்.
வெள்ளை நிற பிரெட், பாஸ்தா மற்றும் அரிசி உணவுகளில் அதிகளவு கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளது. நார்சத்து மிகவும் குறைவாக இருக்கும் இந்த உணவை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது.